தமிழக அரசின் குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ஓய்வூதியர்களுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். Source link

சென்னையில் நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நாளை தொடங்கும் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மேம்படுத்த, அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்று, புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகிறது. இதைக் கருத்தில் கொண்டே, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாடு, வெளிமாநிலப் … Read more

ஜனவரியில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் (ஜன. 6),நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வியாழக்கிழமை (நேற்று) பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. … Read more

நெருங்கும் தேர்தல்… உள்ளூர் பிரச்சினையை கையிலெடுக்கும் அதிமுக… – சிவகங்கையில் போராட்டம் அறிவித்த இபிஎஸ்

சிவகங்கை: மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக தலைமை உள்ளூர் பிரச்சினைக்கு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சிவகங்கை நகராட்சியில் தூய்மைப் பிரச்சினைக்கு ஜன.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியான அதிமுக முக்கிய பிரச்சினைகளுக்கு மட்டும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வந்தது. ஆனால் பாஜகவோ உள்ளூர் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இதனால், பெரிய அளவில் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என அதிமுக மீது … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு: மதுரையில் நீதித் துறை நடுவர் பரபரப்பு சாட்சியம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பரபரப்பு சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 19.6.2020-ல் கரோனா காலத்தில் ஊரடங்கு நிபந்தனையை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தs சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் … Read more

உலக முதலீட்டாளர் மாநாடு 2024: மாநாட்டின் சிறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது. “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடங்கவுள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நமது ‘Titans Of Tamil Nadu’ (தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்கள்) மற்றும் One Trillion Dreams (ஒரு … Read more

வெள்ள நிவாரணமாக மத்திய அரசு உடனடியாக ரூ.2,028.31 கோடி வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழகத்தில் மிக்ஜாம் மற்றும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு உடனடியாக ரூ.2,028.31 கோடி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, தமிழகத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2,000 கோடி நிதி வழங்க, மத்திய அரசுக்கு … Read more

படகு மோதி ஆலிவ் ரெட்லி ஆமை இறப்பு: கடற்கரையில் புதைப்பு

புதுச்சேரி: முட்டையிட கரைக்கு வந்த ஆலிவ் ரெட்லி ஆமை படகு மோதி இறந்து கரை ஒதுங்கியது‌. புதுச்சேரி முதல் மரக்காணம் வரை ஜனவரி மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். இதில் ஆலிவ் ரெட்லி எனப்படும் அரியவகை ஆமை முட்டையிட கரைக்கு வரும் போது படகு மோதி இறந்து புதுச்சேரி தலைமை செயலகம் அருகே இன்று கரை ஒதுங்கியது. 30 வயதுமிக்க 25 கிலோ எடையிலான ஆமை உடலை வனத்துறையினர் … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சென்னை: ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்தி குறிப்பு: மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதல்வர் … Read more