அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி நடந்து வருகின்றன. இதில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் பங்கேற்க 6,099 காளைகள், 1,784 வீரர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. … Read more

ஆரியம் vs திராவிடம்: திருவள்ளுவரை மீண்டும் விவாதப் பொருளாக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியலில் வள்ளுவரை மையமிட்டு, ஆரிய – திராவிட விவாத நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது. அதற்கு மீண்டும் தூபம் போட்டிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, “ஆரியப் பழமை மறையட்டும், சமத்துவப் பொங்கல் மலரட்டும்” எனக் கூறி பொங்கல் வாழ்த்தைப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திருவள்ளுவர் தினமான இன்று, ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது … Read more

பெண்கள் அவிழ்த்துவிட்ட காளைகள் முதல் தவிர்க்கப்பட்ட சாதி பெயர் வரை: பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்!

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் காளை மாடுகளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்டனர். மேலும், உயர் நீதிமன்றம் அறிவுரைப்படி, இந்த ஆண்டு வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும்போது சமுதாய பெயர் சொல்வது தவிர்க்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். ஆண்களுக்கான விளையாட்டாகவே இந்தப் போட்டி பார்க்கப்பட்டது. பார்வையாளர்களும் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்து வந்துள்ளனர். சமீப காலமாக, பார்வையாளர்கள் மட்டுமல்லாது காளைகளை அவிழ்த்து விடும் மாடுபிடி வீரர்களாகவும் பெண்கள் அதிகளவு ஜல்லிக்கட்டு … Read more

“கார் பரிசு வேண்டாம், அரசு வேலை வேண்டும்” – பாலமேடு ஜல்லிக்கட்டு சிறந்த வீரர் பிரபாகரன் உருக்கம்

மதுரை: ‘‘கார் பரிசு வேண்டாம், அரசு வேலை வேண்டும்’’ என்று பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வாகி கார் பரிசு பெற்ற இளைஞர் பிரபாகரன் உருக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டு மொத்தம் 10 சுற்றுகள் நடந்தது. இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்றார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் … Read more

“பெரும் பொருட்செலவில் அரசு முன்னெடுப்பு” – முதல்வர் ஸ்டாலின் @ சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி

சென்னை: “40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் சமூக வலைதளப்பதிவு: தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம். … Read more

“காரை வைத்து என்ன செய்வது?” – ஜல்லிக்கட்டில் 2-வது முறையாக முதல் பரிசு வென்ற மாணவர் கார்த்திக்

மதுரை: “கார் எங்களுக்கான பரிசு கிடையாது. அரசு வேலை கொடுத்தால் எப்படியாவது பிழைத்துக் கொள்வோம்” என்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2-வது முறையாக கார் பரிசு பெற்ற கல்லூரி மாணவர் கார்த்திக், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த ஆண்டு அவனியாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் அதிக எண்ணிக்கையிலான காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு பெற்றார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய கார் பரிசு … Read more

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் களையிழக்கும் காணும் பொங்கல்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளால் பொங்கல் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. தாமிரபரணி கரையோரங்கள், மாவட்ட அறிவியல் மையங்களுக்கு மக்கள் உற்சாகமாக செல்ல முடியவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் தொடர்ந்து பெய்த அதிகனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர பகுதிகள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தன. இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டிருந்தாலும், பாதிப்புகளின் சுவடுகள் ஆங்காங்கே இன்னமும் இருக்கின்றன. திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள … Read more

சிறந்த காளை ‘சின்னக்கருப்பு’, சிறந்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு – பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம்

மதுரை: புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராயவயல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் `சின்னக்கருப்பு’ என்ற காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம் அடைந்தனர். பொங்கல் பண்டிகையையும் ஜல்லிக்கட்டுப் போட்டியையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழர்களுடைய வீரத்தையும், பாரம்பரியத்தையும் … Read more

சென்னையில் 17,000 போலீஸார் பாதுகாப்பு @ காணும் பொங்கல் – ட்ரோன் கேமராக்களில் கண்காணிப்பு

சென்னை: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். சென்னை முழுவதும் 15,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்ட தகவல்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் … Read more

”திருக்குறள், திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை” – திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை என்றும் வள்ளுவரின் நிறம் மனிதநேயம்தான். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம் என ஆளுநரின் சர்ச்சைப் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மும்மொழிக் கொள்கைக்கான தேவை என்னவென்று கூறினால், அதை நாம் புரிந்து கொள்ள முடியும். தற்போது மும்மொழிக் கொள்கைக்கான தேவை எதுவுமே கிடையாது. நம்முடைய … Read more