விழுப்புரம் | சவப்பெட்டியில் மின்சாரம் தாக்கி 15 பெண்கள் மயக்கம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கயல்விழி (17) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இவரது உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்த குளிர்பதன சவப்பெட்டியில் (ப்ரீசர் பாக்ஸ்) வைத்தனர். நேற்று பிற்பகல் இறுதி அஞ்சலி செலுத்த அப்பகுதி மக்கள் திரளாக வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பிரிசர் பாக்ஸிலிருந்து மின்சாரம் தாக்கியது. இதில் அதே பகுதி யைச் சேர்ந்த எழிலரசன் மனைவிசெல்வி, அழகேசன் மனைவி சுந்தரி, … Read more

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மதுரை: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டுமென மதுரையில் நடந்த கூடுதல் நீதிமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், கூடுதல் நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.166 கோடி ஒதுக்கியது. இதையடுத்து கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங்களின் துவக்க விழா நேற்று நடந்தது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை … Read more

15 நிமிடம் ஸ்டிரைக்: திருச்சியில் ஒரே நேரத்தில் 7 இடங்களில் ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம்

15 நிமிடம் ஸ்டிரைக்: திருச்சியில் ஒரே நேரத்தில் 7 இடங்களில் ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம் Source link

ட்விட்டருக்கு எதிராக களமிறங்கிய புதிய செயலி..!!

எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டரில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. முக்கியமாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் நிகழ்த்திய ஆட்குறைப்பு நடவடிக்கையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையில் ட்விட்டரின் முக்கிய நபர்களும் சிக்கினர். இதைத்தொடர்ந்து, ட்விட்டரின் முன்னாள் சிஇஒ-வான ஜாக் டோர்சி ட்விட்டருக்குப் போட்டியாக சமூகவலைதளச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்துவேன் என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். தற்போது, அவர் கூறியதன்படி ‘ப்ளூஸ்கை (Bluesky)’ என்ற செயலியைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலியானது … Read more

சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரியின் சிசிடிவி காட்சி..!

ஓசூர் தர்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம், கார் மீது மோதியதோடு சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியன் தடுப்புக்களையும் உடைத்தது. இந்த, காட்சிகள் முன்னால் சென்று கொண்டிருந்த மினிபஸ்சின் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் தசரதன், டூவீலரில் பயணித்த கலையரசன், வீரபூசய்யா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கையால் கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா சாகுபடி அதிகரிக்கும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடுபெறும் அரசின் நடவடிக்கையால் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் வரவேற்பு: இங்கு சாகுபடி செய்யப்படும் தரமான ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால், பெங்களூரு … Read more

தீர்ப்புகள் மொழி பெயர்ப்பில் சென்னை ஐகோர்ட் முதலிடம்: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு

மதுரை: நீதிமன்ற தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளதாக பொறுப்பு தலைமை நீதிபதி கூறியுள்ளார். மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசுகையில், ‘‘நமது சட்டத்தை பற்றி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் நீதிமன்றங்களில் ஆன்லைன் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளை ஆங்கிலத்தில் … Read more

மூன்று மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு கணவன், மனைவி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவரது மகன் சுபாஷ் (25). டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், சுபாஷ் கடந்த சில வருடங்களாக அதேப் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள் அஷ்டலட்சுமி (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு சுபாஷ் அஷ்டலட்சுமியை அழைத்துச் சென்று வெளியூரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சோத்தக்குடி … Read more

தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு களில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் 27, 28-ம் … Read more