“ராகுல் காந்திக்கு மட்டும் இந்திய நாட்டில் தனிச்சட்டம் கிடையாது” – அண்ணாமலை கருத்து

தூத்துக்குடி: “ஒரு சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, இந்தியாவின் உச்சபட்ச குடும்பத்தில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் அது பொருந்தும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தூத்துக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “லட்சத்தீவில் இதேபோல எம்.பி ஒருவருக்கு கொலை வழக்கில் தீர்ப்பு வந்தபோது உடனடியாக தகுதி … Read more

எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்யக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன்திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு 1,076 கி.மீ தொலைவிற்கு இரண்டாவது நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இங்கு மட்டும் 4 கடல் வாழ் பல்லுயிர் காப்பகம் அமைந்துள்ளது. கடற்பரப்பில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடல் வளம் பாதிக்கிறது. கடற்பரப்பில் ஏற்படும் எண்ணெய் கசிவால் … Read more

EPFO நிறுவனத்தில் 2859 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க!

EPFO நிறுவனத்தில் 2859 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க! Source link

#திருவள்ளூர் : பலத்த காற்றுடன் மழை.. கட்டிட மேஸ்திரிக்கு நேர்ந்த சோகம்.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்து கட்டிடம் மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள திருமல ராஜூப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி குப்பைய்யா (70). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளிப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது குப்பைய்யா அப்பகுதியில் உள்ள கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.  அப்பொழுது கோவிலின் பின்புறம் உள்ள … Read more

சென்னையில் ரூ.137 கோடி செலவில் உட்புற சாலைகள் சீரமைப்பு

சென்னை: சென்னையில் உள்ள உட்புற சாலைகளை ரூ.137 கோடி செலவில் சீரமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் வடிகால் பணி, மின் கேபிள் புதை வட பணி, குடிநீர் வடிகால் பணி உள்ளிட்ட பல்வேறு சேவை துறை பணிகளால் சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பருவமழையின்போதும், பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. இந்த சாலைகளை சீரமைக்கும் பணியை மாநகராட்சி துவங்கி உள்ளது. … Read more

புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப்பணித்துறை பணி நீக்க ஊழியர்கள், குடிநீர் தொட்டி மீது பெட்ரோல் கேன்களுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை அரசு பொதுப்பணித்துறையில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் தங்களை மீண்டும் பணியமர்த்த கோரி பலகட்ட பேராாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மீண்டும் மூலகுளம் எம்ஜிஆர் நகர் பகுதியிலுள்ள குடிநீர் தொட்டி மீது … Read more

திருச்சி அருகே திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 6 பேர் காயம்

திருச்சி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற இருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் மாவட்டத்தை 10-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது. இதனால் அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநர் திடீரென்று … Read more

“அன்று இந்திரா காந்திக்கு… இன்று ராகுல் காந்திக்கு…” – பதவி பறிப்பு குறித்து கே.எஸ்.அழகிரி

சென்னை: “மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்” என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 2019 ஏப்ரல் 13ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் பரப்புரையின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது பொதுவாக கூறப்பட்ட ஒரு கருத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த … Read more

இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்

நாகர்கோவில்: குமரி ஆபாச பாதிரியார், நாகர்கோவில் சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாமிட்டுள்ளது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால்விளையை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29) மீது, சாட்டிங் மூலம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக  பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் அளித்திருந்தார். இதேபோல் சென்னை சேர்ந்தவர்கள் உட்பட 80 இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது. … Read more