திமுகவுக்கு சவால் விடும் வானதி சீனிவாசன்..!!

வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பல்வறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்றெல்லாம் பேசியருப்பது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்நிய மண்ணில் இந்தியாவை ராகுல் அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியா என்பது பல கட்சிகளைக் கொண்ட ஐனநாயக நாடு. அதனால் … Read more

தருமபுரி | ரத்த சோகையை போக்க உதவும் செறிவூட்டப்பட்ட அரிசி: ஏப்ரல் முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்

தருமபுரி: ரத்த சோகை பிரச்சினைக்கு தீர்வு தரும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் ரேஷன் கடைகளில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தது: ரத்த சோகை பிரச்சினை நம் நாட்டில் குறிப்பிட்ட சதவீத மக்களிடம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய … Read more

ஸ்வப்னா லோக் வளாகத்தில் நடந்த இரண்டாவது பெரிய தீ விபத்து

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் ஆர்.பி. சாலையில் 8 தளங்கள் கொண்ட ஸ்வப்னலோக் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டாவது மாடியில் இருந்து மளமளவென பரவிய தீ 7, 6, 5வது தளங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க முயன்றனர். … Read more

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. பழனிசாமி தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பணிகளை கட்சி தலைமை தொடங்கியது. முதல்கட்டமாக, ஓபிஎஸ் படத்தை நீக்கி, பழனிசாமி கையெழுத்திட்ட அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் … Read more

பெட்ரோல், டீசல் விலையில் 300வது நாளாக மாற்றமில்லை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் மக்களுக்கு பலனில்லை

சேலம்: கடந்தாண்டு  மே 22ம் தேதி சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 குறைந்து ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.6.70 குறைந்து ரூ.94.24 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.  இந்த விலை குறைப்பு நடவடிக்கைக்கு பின், கடந்த 300 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தவில்லை. கடந்த 10 மாத காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. அதாவது நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 69.12 டாலருக்கு விற்கப்பட்டது. 120 … Read more

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர் வழக்கு; வங்கி ஆவணங்கள் கைப்பற்றிய போலீஸ்

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர் வழக்கு; வங்கி ஆவணங்கள் கைப்பற்றிய போலீஸ் Source link

கழிவறைக்கு செல்லும் போது நர்ஸிங் மாணவிக்கு நடந்த கொடூரம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துவுள்ள ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவருடைய 19 வயது மகள் தரணி, அம்மாவட்டத்திலுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டுக்கு அருகிலிருக்கும் கழிவறைக்கு சென்ற தரணி, திடீரென சத்தம் போட்டு அலறியுள்ளார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் சத்தம்கேட்ட இடத்துக்கு வரும்போது, கழுத்தறக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கிடந்துள்ளார் தரணி. கழுத்தில் காயம் ஆழமாக இருந்ததால், சிறுதி நேரத்திலேயே தரணி … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியகுளம்: அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வஉசி தெருவை சேர்ந்த ஆறுமுகம் – மல்லிகா தம்பதியின் ஒரே மகனான ஜெயந்த் (37), ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் விவிபி ரெட்டியுடன் ஜெயந்த் சென்று கொண்டிருந்தார். சங்கே … Read more