ரெண்டு அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன்? பிடிஆரை சீண்டிய செல்லூர் ராஜு!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மதுரை காமராஜர் சாலைப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் அமைச்சரும் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது “தி.மு.க. பல்வேறு திட்டங்களை கொண்டுவருதாக கூறி, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை மூடுவிழா காண வைத்துவிட்டனர். பெண்களின் கஷ்டத்தை உணர்ந்த ஜெயலலிதா மிக்சி, … Read more

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள் பாதிப்பு!

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு எப்போதும் மனதுக்கு இதமாகவும்  குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவுவதால் தமிழக மட்டுமல்ல பல்வேறு அண்டை மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வருவதுண்டு. ஏற்காட்டில் இயற்கையான அழகை கண்டு ரசிப்பதோடு எப்போதும் மிதமான சூழ்நிலை நிலவுவதால் ஏற்காட்டின் அழகை ரசிக்க ஏராளமானோர் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஏற்காட்டில் காலை நேரத்தில் கடுமையான பணிபொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு

திருச்செங்கோடு: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்செங்கோடு கோயிலில் நீதிபதிகள் ஆய்வு செய்வதை ஒட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு கோயிலில் நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த வெங்கடேஷ் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

உறை பனியால் உறைந்த கொடைக்கானல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உறை பனிக் காலமாக இருக்கும். இந்தமுறை கடந்த நவம்பர் மாதத்திலேயே உறை பனிக் காலம் தொடங்கிவிட்டது. வழக்கமாக நவம்பர், டிசம்பரில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகரித்து வரும் உறை பனியால் கடும் குளிர் வாட்டி வருகிறது. பிற்பகலில் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நீடிக்கும் பனியால் குளிர்ந்த காற்று வீசுகிறது. இரவு நேரங்களில் புல் வெளிகள், … Read more

ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்தான்: ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே‌ராஜன் சாடல்!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என … Read more

நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக புறவழிச்சாலை விரைவில் அமையுமா? அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக புறவழிச்சாலை விரைவில் அமையுமா?  என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்திருக்கின்றனர். பொள்ளாச்சி நகரில் இருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலை ரோடுகளில் ஒன்றாக கருதப்படும் பாலக்காடு ரோட்டில்  பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து வாகன போக்குவரத்து இருக்கும். இவ்வழியாக, நல்லூர், முத்தூர், மண்ணூர், ராமபட்டிணம், கோபாலபுரம் மற்றும் கேரள பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி கோவை ரோடு சக்திமில் … Read more

மோடி தொடர்பான பி.பி.சி ஆவணப்படத்தின் இணைப்புகள் நீக்கம்: ‘தணிக்கை’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மோடி தொடர்பான பி.பி.சி ஆவணப்படத்தின் இணைப்புகள் நீக்கம்: ‘தணிக்கை’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் Source link

நெல்லை : சமைக்க சொல்லி கண்டித்த தாய்.! மகள் எடுத்த விபரீத முடிவு.! 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழகோடன்குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரின் மகள் கிறிஸ்டில்லா மேரி. இவருக்கு வருகிற 1-ந்தேதி திருமணம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.  இந்த நிலையில், கிறிஸ்டில்லா மேரி அடிக்கடி செல்போன் பார்த்துக்கொண்டு வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்தார். இதை கவனித்த அவரது தாய் மகள் கிறிஸ்டில்லா மேரியை பார்த்து, “உனக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்குள் சமையல் வேலைகளை எல்லாம் கற்றுக்கொள்” என்று கண்டித்துள்ளார்.  இதனால், மன … Read more

ராமேசுவரம், ஸ்ரீரங்கம், குமரியில் ஆயிரக்கணக்கானோர் தை அமாவாசையையொட்டி புனித நீராடல்

ராமநாதபுரம்/திருச்சி/ நாகர்கோவில்: தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், குமரி முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி, தை அமாவாசை நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் அளிப்பது அவர்களது ஆன்மாக்களுக்கு செய்யும் கடமையாகும் என்பது ஐதீகம். அந்த வகையில், தை அமாவாசையான நேற்று, புண்ணியத் தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க … Read more