திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டல் 3 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை..!!

திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள அசைவ ஹோட்டலின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 3 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர் டிஜிட்டல் பேனர் மூலம் அறிவிப்பு செய்திருந்தார். இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் அலைமோதிய அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து 3 ரூபாய்க்கு பிரியாணியை வாங்கி உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டும், பார்சல் வாங்கி கொண்டும் சென்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. Source link

எழுத்தாளர் கல்கியின் நினைவு நாளை முன்னிட்டு 'கல்கி தீபாவளி மலர்க் கதைகள்' நூல் வெளியீடு

சென்னை: எழுத்தாளர் கல்கியின் நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை மைலாப்பூர் ராகசுதா ஹாலில் வியாழக்கிழமை நடந்தது. கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கல்கி, ஆனந்த விகடன் மற்றும் கல்கி தீபாவளி மலர்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு, புத்தகமாக வெளியிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டு, கல்கியின் சாதனைகளை நினைவு கூர்ந்தார். புத்தகத்தின் முதல் பிரதியை ஹரிகதை கலைஞர் சிந்துஜா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, சிந்துஜா, ‘நந்தனார் சரித்திரம்’ … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு எஸ்பி முரளி ரம்பா உட்பட 48 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

ஊட்டி: ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்பி முரளிரம்பா உட்பட 48 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், தீபு, வாளையார் மனோஜ், சதீசன், ஜித்தின் ஜாய், சந்தோஸ்சாமி ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி தரப்பில் கூடுதல் எஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், … Read more

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னை வானிலை மையம் தகவல்.! 

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று காலை இந்திய பெருங்கடலில் உள்ள கிழக்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டி இருக்கும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது.  வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.  இது, … Read more

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு, தொடர்ந்துமேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 31-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுவடைந்து,பிப்.1-ம் தேதி … Read more

போலிகளையும், துரோகிகளையும் நம்பக்கூடாது உண்மையான ஆவண படத்திற்கே பயந்துபோய் தடை விதிக்கிறார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அயோத்திப்பட்டிணம்: ‘உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே பயந்துபோய் தடை விதிக்கிறார்கள்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சேலம் மாசிநாயக்கன்பட்டியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் 26,649 பேருக்கு ரூ.221.42 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர்  பேசியதாவது: ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் 70 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் முதல்வர்.  முதல்வரின் … Read more

அம்பேத்கர் திடலுக்கு வந்த பிக் பாஸ் விக்ரமன்: ஆரத் தழுவி புதிய பட்டம் கொடுத்த திருமா

அம்பேத்கர் திடலுக்கு வந்த பிக் பாஸ் விக்ரமன்: ஆரத் தழுவி புதிய பட்டம் கொடுத்த திருமா Source link

தகாத உறவு.. நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்.. நெல்லையில் பரபரப்பு.! 

திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில் வெள்ளியப்பன் என்ற 28 வயது நபர் கூலி வேலை செய்து வசித்து வருகின்றார். மும்பையில் கூலி வேலை செய்த இவர் சொந்த ஊரில் நடக்கும் கொடை விழாவுக்கு வந்துள்ளார். அப்போது தனது பைக்கில் அவர் பயணித்த நிலையில் ஒரு செல்போன் அழைப்பு வந்தது. எனவே அவர் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வந்த மர்ம கும்பல் அவரை சூழ்ந்து அறிவாளால் தலையில் … Read more

“எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவதூறு பேசுவது தொடர்கதை ஆகிவிட்டது” – உதயநிதி பேச்சு

சேலம்: ‘தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசை, வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் அவதூறு பேசுவது தொடர்கதையாக கொண்டுள்ளது’ என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 26,649 பயனாளிகளுக்கு ரூ.221.42 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் மற்றும் … Read more

முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன், முட்டை விலையில் 30 காசுகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, என்இசிசி நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ், முட்டை விலையில் மேலும் 25 காசுகள் குறைத்துள்ளார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 515 காசில் இருந்து 490 காசாக குறைந்துள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களில் ஒரு முட்டைக்கு … Read more