கரூர் | குடியரசு தின விழாவில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கேடயம் – வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக செய்ததாக பாராட்டு

கரூர்: குடியரசு தின விழாவில் டாஸ்மாக் டிஎம் உள்ளிட்ட 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கியது சர்ச்சையையும், சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 74வது குடியரசு தின விழா கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இதில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக … Read more

முதல் முறையாக `பழங்குடி பொக்கிஷங்கள்’ நடமாடும் வாகனத்தில் விற்பனை

நெல்லை:  நெல்லை  மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் காணி  பழங்குடியினர் பொருட்களை வெளி இடங்களுக்கு கொண்டு சென்று விற்கவும்,  நெல்லை மாவட்ட நிர்வாகமும், போஸ் நிறுவனமும் இணைந்து சுமார் ரூ.17 லட்சம்  மதிப்பில் நடமாடும் விற்பனை வாகனத்தை புதிய முறையில் வடிவமைத்து இலவசமாக  வழங்கி உள்ளனர். பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவின்போது    `பழங்குடி பொக்கிஷங்கள்’ என்ற நடமாடும் விளைபொருள் விற்பனை வாகனத்தை  கலெக்டர் விஷ்ணு, கொடியசைத்து துவக்கி வைத்தார். … Read more

தேனி : சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்களில் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் முதல் அறிவியல் சுற்றுலா பயணிகள் குறிக்க தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய காலை முதல் நீர்வரத்து குறைந்து சீரானது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Source link

ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். … Read more

கோயில் காணிக்கை எண்ணும் பணி யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு

வேலூர்: தமிழ்நாடு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சட்டப்பிரிவு 46(i), 46(iii)ன் கீழ் விளம்புகை செய்யப்பட்டு அனைத்து பட்டியலை சேர்ந்த கோயில்களிலும் உண்டியல் திறப்பு நிகழ்வை கோயில் நிர்வாகம் மூலம் நேரடியாக திருக்கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக திருக்கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் லிங்க்ஐ அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி ஐடிஎம்எஸ் தளத்தில் உள்ள திருக்கோயில் வலைதளத்தில் பதிவேற்றம் … Read more

தெறிக்கும் இசை நிகழ்ச்சி; குணால் கம்ரா காமெடி: மிஸ் பண்ணாதீங்க சென்னை மக்களே!

தெறிக்கும் இசை நிகழ்ச்சி; குணால் கம்ரா காமெடி: மிஸ் பண்ணாதீங்க சென்னை மக்களே! Source link

தமிழக தொழிலாளரை விரட்டி அடிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் – வைரல் வீடியோ குறித்து திருப்பூர் போலீஸார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் திலகர் நகரில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வடமாநிலத் தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் துரத்தி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாநகரத்துக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000-த்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பணி செய்து வருகின்றனர். தமிழர்களை விட, வடமாநிலத் … Read more

தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு

ஊட்டி: வனத்தில் தாயைப் பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட 2 யானை குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கிய ஊட்டி பழங்குடியின தம்பதியின் அனுபவத்தை, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக ஊட்டியைச் சேர்ந்த இயக்குனர் உருவாக்கியுள்ளார். இந்த ஆவண குறும்படம்தான் 95வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில், ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயைப் பிரிந்து மீட்கப்படும் யானை … Read more

மேம்பால பணி: சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மேம்பால கட்டுமான பணி காரணமாக தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால், தெற்கு உஸ்மான் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 28ம் தேதி முதல் செப்டம்பர் 27 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. இதன் விவரம்.. தெற்கு உஸ்மான் … Read more