கோவை : ஒரே நாளில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 255 பட்டாசு பெட்டிகள் பறிமுதல் – நான்கு பேர் கைது.!

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள கடைகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பாதுகாப்பு அற்ற முறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் படி, ஆனைமலை போலீசார் வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கடையில் சரவெடி உள்பட பல்வேறு வகை பட்டாசுகளை 61 பெட்டிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாசை பதுக்கி வைத்து … Read more

பாகிஸ்தானில் தொழுகையின் போது நேர்ந்த கொடூரம்! 46 பேர் உடல் சிதறி பலி..!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் புகழ்பெற்ற மசூதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான இஸ்லாமியர்கள் வந்து தொழுகை நடத்திச் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் அந்த மசூதியில் தொழுகை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்தவர் தூக்கி வீசப்பட்டனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தில் அந்த மசூதியின் ஒரு பகுதி அப்படியே இடிந்து அங்கிருந்தவர்கள் … Read more

பெட்ரோல் பங்கில் பலமுறை வேலை கேட்டும் தராததால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது..!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பலமுறை வேலை கேட்டும் தராததால், பங்க் மீது, பெட்ரோல் குண்டு வீசிய நபர் சிசிடிவி காட்சிகளின் மூலம் கைது செய்யப்பட்டார். கடந்த 28-ஆம் தேதி இரவு பரமக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் மீது ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிய நிலையில், ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பரமக்குடியை சேர்ந்த கணேசன் என்பது … Read more

ஜெயலலிதா கட்சியையே சிலர் ஏலம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் – ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: ஜெயலலிதாவின் கட்சியையே சிலர் ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ தொடர் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்த தொடரில் முதல்வர் அளித்துள்ள பதில்கள் வருமாறு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூருவில் ஏலம் விடுகிறார்களே? இங்கு சிலர் அவருடைய கட்சியையே ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாக … Read more

மதுபாட்டிலுக்கு ரசீது கேட்டு அதிகாரியிடம் வாக்குவாதம் போதை ஆசாமி.! வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ.! 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 15 வேலம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில், திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சிவக்கொழுந்து ஆய்வு மேற்கொண்டிருந்தார்.  அந்த ஆய்வின் போது, அந்த மதுபானக் கடையில் பலர் மதுபாட்டில்கள் வாங்கி கொண்டிருந்தனர். அதில் ஒரு நபர், “தான் வாங்கிய மதுபாட்டிலுக்கு ரசீது வழங்க வேண்டும். எதற்காக கூடுதல் விலைக்கு மதுபாட்டிலை விற்பனை செய்கிறீர்கள் என்றுக் கேட்டுள்ளார். அதன் பின்னர் நீங்கள் உரிய பதில் அளிக்காவிட்டால், இந்தக் … Read more

சிம்பு கதையில் பிரதீப் ரங்கநாதன்… பிரபாஸ்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் : டாப் 5 சினிமா

சிம்பு கதையில் பிரதீப் ரங்கநாதன்… பிரபாஸ்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் : டாப் 5 சினிமா Source link

தமிழக அரசின் ரூ.1,000 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை – ரூ.44 கோடி கருவூலத்தில் சேர்ப்பு

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை தமிழகம் முழுவதும் 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.44 கோடி, அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, கரும்பு, … Read more

சுடிதார் டிசைன்ஸ் வேணும்னா இவர் கிட்ட கேட்டுக்கலாம்… சாய் காயத்ரி வைரல் க்ளிக்ஸ்

சுடிதார் டிசைன்ஸ் வேணும்னா இவர் கிட்ட கேட்டுக்கலாம்… சாய் காயத்ரி வைரல் க்ளிக்ஸ் Source link

பொதுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய வாக்காளர் அடையாள அட்டை.!

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் பதினாறு லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளது.  இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டை, முதற்கட்டமாக தற்போது நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு வழங்கப்படும். அதேபோல், பழைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டையை பெறலாம். இதில், க்யூஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் … Read more

அதிர்ச்சி..!! சென்னையில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு..!!

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கார்த்திக் (27). இவர் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு வியாசர்பாடி பகுதியில் உள்ள ரோட்டோர கடையில் பரோட்டா வாங்கி வந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கினர். இரவு 11 மணி அளவில் கார்த்திக்கு மட்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். … Read more