பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய காவலருக்கு நேர்ந்த துயரம்..!

கடலூர் அருகே பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு மற்றும் எஸ்.கே பாளையம் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக  அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இரவு பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பியபோது எதிர்பாராத விதமாக ரோந்து வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில், வாகன இடுக்கில் சிக்கிய காவலர் சதீஷ்குமார் தலையில் பலத்த காயமடைந்து … Read more

நீட் விலக்கு தொடர்பான வழக்குகள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பின்னர் மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “நீட் தேர்வு வேண்டாம் என்று கூறி கடந்த … Read more

பழனி கோயில் கும்பாபிஷேகம்… முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டு கோவில் கோபுரங்கள், பதுமைகள் ஆகியவை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நன்மங்கள இசை மற்றும் விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேகத்திற்கான வேள்விச் சாலை நிகழ்ச்சிகள் இன்று மாலை துவங்குகிறது. எட்டுக்கால வேள்விகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவில் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோவில்கள், கோபுரங்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. … Read more

காணும் பொங்கலையொட்டி நீச்சல், ரேக்ளா, சைக்கிள், கோலப்போட்டி களைகட்டியது-தப்பாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் ஆடி அசத்தல்

திருவாரூர் : காணும் பொங்கலையொட்டி திருவாரூரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ துவக்கிவைத்தார்.காணும் பொங்கலையொட்டி திருவாரூர் ஆரூரான் விளையாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 38ம் ஆண்டாக நேற்று இந்த விளையாட்டு விழாவானது தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும், செயலாளர் செல்வம், பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியினை திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டிகலைவாணன் … Read more

`க்ளாஸ்ல டீச்சர் மொபைல் கேம் விளையாடறாங்க; நாங்க பாத்ரூம் கழுவணுமாம்’-பொங்கி எழுந்த சிறார்

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக புகார் தெரிவித்து கோவில்பட்டி அருகே பள்ளியை மூடி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டி கிராமத்தில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இங்கு பயிலும் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் … Read more

பிக் பாஸ் வாக்கெடுப்பில் களம் புகுந்த திருமா: ‘தம்பி விக்ரமனை ஜெயிக்க வைப்போம்’ என ட்வீட்

பிக் பாஸ் வாக்கெடுப்பில் களம் புகுந்த திருமா: ‘தம்பி விக்ரமனை ஜெயிக்க வைப்போம்’ என ட்வீட் Source link

#BREAKING :: அறநிலைத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் அறநிலையத் துறை ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் “தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போது திருக்கோயில்களில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வினை இந்து சமய அறநிலை துறை ஆணையரே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி திருக்கோயில் பணியாளர்களுக்கு தமிழக அரசின் அரசாணைப்படி திருத்திய ஊதிய விகிதம் மற்றும் இதரப்படிகள் நிர்ணயம் … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் சோகம்: 40 அடி உயரத்திலிருந்து விழுந்து லைட்மேன் பலி..!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் பணியில் ஈடுபட்டிருந்த லைட்மேன் 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் ஏ.ஆர். பிலிம் சிட்டி என்ற பெயரில் ஸ்டுடியோ உள்ளது. இங்கே ஒரு சில படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ படத்திற்கான படப்பிடிப்புக்கு ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகிறது. இதற்காக சாலிகிராமத்தைச் சேர்ந்த லைட்மேன் குமார் (47) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், … Read more

தமிழகத்தில், குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான PVC தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு..!

தமிழகத்தில், குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான PVC தடுப்பு மருந்துக்கு சில மாதங்களாக தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், மத்திய அரசிடமிருந்து தேவையான அளவு மருந்து வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 30 லட்சம் டோஸ் மருந்துக்கான தேவை உள்ளதாகவும், கடந்த ஆண்டு 18 புள்ளி 38 லட்சம் டோஸ் மருந்து மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குழந்தை பிறந்து ஆறு, ஒன்பது மற்றும் பதினான்கு மாதங்களில் வழங்கப்படும் இந்த மருந்து, மாதம் ஒன்றுக்கு இரண்டரை … Read more

சென்னையில் 3 கடைகளில் 1500 பொம்மைகள் பறிமுதல்: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாததால் நடவடிக்கை

சென்னை: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத காரணத்தால் சென்னையில் 3 கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த 1500 பொம்மைககளை பிஐஎஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தளர். இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் 2016 பிரிவு 28 இன் படி கடைகளில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத பொம்மைகளை விற்பனை செய்யக் கூடாது. அப்படி விற்பனை செய்பவர்களுக்கு BIS சட்டம், 2016 பிரிவு 29 இன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 … Read more