சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து, பயறு விதைகள் – விவசாயிகள் பெற்றுக்கொள்ள அமைச்சர் வேண்டுகோள்
சென்னை: சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.400 மானியத்தில் உளுந்து, பாசிப்பயறு விதைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நெல் அறுவடைக்குப்பின் நஞ்சை தரிசில் பயறு வகைகளை சாகுபடி செய்வதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சம்பா நெல் அறுவடைக்குப் பின், 10 லட்சம் ஏக்கரில் பயறு வகை சாகுபடிக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்ய, 2022-ம் ஆண்டு காரீப் பருவத்திலேயே 11,731 … Read more