திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நகரங்களில் இருந்து 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்: முதன்மைச் செயலாளர் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக  மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. வரும் 6ம்தேதி மகாதீப விழா நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக வரும் 5ம்தேதி முதல் 7ம்தேதி வரை 3 நாட்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. … Read more

காவல்நிலைய சிசிடிவி கேமராக்களை பராமரிப்பது தொடர்பான வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பராமரிப்பது தொடர்பாக மாவட்டம் தோறும் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அளித்த பொய் புகாரின்பேரில், மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் எல்.முருகானந்தம் என்பவரை தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்துள்ளார். தான் ஒரு மாற்றுத் திறனாளி எனக் கூறியும் … Read more

சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் : எதிர்பார்ப்பில் ஜீ தமிழ் சீரியல்

சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் : எதிர்பார்ப்பில் ஜீ தமிழ் சீரியல் Source link

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் தொடர்ந்துள்ள அந்த வழக்கில், “அரசு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றி தமிழக ஆளுநர் பேசி வருகிறார். மேலும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராக பேசும் ஆளுநர், தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்துகிறார். சம்பளம் … Read more

இவர்களுக்கெல்லாம் வயிறு எரிகிறது: அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். தமிழகம் அமைதியாக இருக்கிறது என்று இவர்களுக்கு எல்லாம் வயிறு எரிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். … Read more

அரவக்குறிச்சி அருகே பழமையான வீடு இடிந்து விழுந்து விபத்து: மூதாட்டி சடலமாக மீட்பு

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடிந்து விழுந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட மூதாட்டியை மீட்கும் பணியில் தீயணைப்பு, காவல், வருவாய்துறையினர் போராடிய நிலையில் 4 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். மீட்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடை வீதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி (74). கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் 70 ஆண்டுகள் பழமையான முதல் தளத்துடன் கூடிய மாடி வீட்டில் தனியாக வசித்து வந்தார். 3 … Read more

டிசம்பர் 6ஆம் தேதி விடுமுறை.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

தமிழகத்தில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வர சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இந்தாண்டு வரும் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கவுள்ள நிலையில் 6 ஆம் தேதி மாலை மெகா தீபம் … Read more

லிப்டில் சிக்கிய மா.சுப்பிரமணியன் – ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா சுப்பிரமணியன் அங்கு வருகை தந்தார்.  அவர் மருத்துவமனையின் கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரவு துறை கட்டடத்தில், ஒவ்வொறு நிகழ்ச்சியாக துவக்கி வைத்து விட்டு, கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு, 3ஆவது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு செல்ல லிஃப்டில் ஏறினார்.  அவர் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லிஃப்டின் இயக்கம் தடைப்பட்டது. … Read more

தீபத்திருநாள் நெருங்குவதையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி: குறைந்த அளவில் கிடைக்கும் களிமண்; உற்பத்தி சரிவு

காங்கயம்: தீபத்திருநாள் நெருங்கிவருவதை முன்னிட்டு காங்கேயம் அருகே அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது, குறைந்த அளவில் களிமண் கிடைப்பதால் உற்பத்தி குறைந்ததாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அகல் விளக்குகள் தான். அன்றைய தினம் வீடுகள் தோறும் விதவிதமான அகல் விளக்குகள் கண்ணைக் கவரும் வகையில் வரிசை கட்டியிருக்கும். வரும் டிசம்பர் 6ம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருநாள் வரும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த அகல்விளக்குகள் பல்வேறு பகுதிகளில் மண்பாண்டத் … Read more

காவலர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் சாதி விவரம் கேட்கப்பட்டதால் சர்ச்சை!

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில்  நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் சாதி குறித்த வகுப்பு வாரி பிரிவு விவரம் இடம் பெற்றிருந்தது. தேர்வு நுழைவுச்சீட்டில் இதுவரை இந்த விவரம் இடம் பெறாத நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள 3,552 ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் … Read more