KKSSR: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் கேரள சர்வே பண்ணக்கூடாது

கோவை: கேரளா அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே பண்ண கூடாது – கோவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார்,மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் தலைமை … Read more

கடும் உரத் தட்டுப்பாட்டுக்கு மாற்றாக இயற்கை உரம் தயாரிப்பு: மீன் கழிவில் இயற்கை உரம் தயாரித்து பெண் விவசாயி அசத்தல்..!!

விராலிமலை: விராலிமலை அருகே மீன் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை வயல்களுக்கு தெளித்து பெண் விவசாயி ஒருவர் அதிக மகசூல் ஈட்டி வருகிறார். கொடியங் காட்டுபட்டியை சேர்ந்த லக்ஷ்மி தமக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உர தட்டுப்பாடு நிலவிய போது பொறியியல் பட்டதாரி மகன் மற்றும் டிப்ளமோ படித்த மகளின் உதவியால் யூ டியூப் உள்ளவற்றின் மூலம் மீன் கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை … Read more

தமிழக ஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளர் மீது அரசு தரப்பில் அவதூறு வழக்கு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளை தவிர்த்து பேசியுள்ளார். அதனால் அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த … Read more

சுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்.! ராட்சத அலையில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவி பலி.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ராட்சத அலையில் சிக்கி ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் அத்திபலே பகுதியை சேர்ந்தவர்கள், ஆன்மீக யாத்திரைக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்ற அவர்கள், நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றனர். அப்பொழுது அனைவரும் அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு கடலில் குளித்துள்ளனர். இதில் பெற்றோர்களுடன் சுற்றுலா வந்த 15 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவி சுஷ்மிதா என்பவர் கடலில் குளித்த போது எதிர்பாராத விதமாக ராட்சத ஆலையில் … Read more

நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருடைய தாயார் சரோஜினி அம்மாள் (எ) பாப்பா (87). மதுரை விரகனூரில் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் வடிவேலு அவர்களின் … Read more

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலைமை: முதல்வர் தலைமையில் ஆலோசனை 

சென்னை: தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலைமை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி, மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்ட காவல் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் … Read more

இனவெறி இலங்கை அரசுக்கு உதவுவது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

இலங்கைக்கு உதவி செய்ய வேண்டிய எந்த வகையான தார்மிகக் கடமையும் இந்தியாவுக்கு கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசு மீளமுடியாத கடன்சுமையில் சிக்கியுள்ள நிலையில், அந்த நாடு பன்னாட்டு நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. மனித நேய அடிப்படையில் இந்தியாவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, மனித உரிமைகளை மதிக்காத இலங்கைக்கான பொருளாதார உதவிகளை … Read more

8 கி.மீ., நீளத்தில் அமைகிறது; தொப்பூர் கணவாயில் ரூ.370 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்: அரசுக்கு கருத்துரு அனுப்பியதாக ஆய்வு செய்த கலெக்டர் தகவல்

தர்மபுரி: தொப்பூர் கணவாயில் கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்தாண்டு சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. இந்நிலையில் அங்கு 8 கி.மீ., நீளத்திற்கு ரூ.370 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாக, கலெக்டர் தொிவித்துள்ளார். தர்மபுாி – சேலம் மாவட்ட எல்லையில் தொப்பூர் கணவாய் உள்ளது. மலைக்குன்றுகளால் சூழ்ந்த தொப்பூர் கணவாயின் வழியாக தர்மபுாி, சேலம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினசரி லட்சக்கணக்கிலான வாகனங்கள் இந்த கணவாய் வழியாக கடந்து செல்கிறது. அதிவேகம், அலட்சியத்தால் கட்டுப்பாட்டை … Read more

அரசு தேர்தல் வாக்குறுதிபடி வங்கி கடனை தள்ளுபடி செய்யனும்-போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் பெற்ற 50க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு நிலுவையில் உள்ள கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செயல்பட்டு வரும் காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் ஏராளமான பொதுமக்கள், விவசாய கடன், … Read more

52 பேத்தி, பேரன்கள்.. ராமநாதபுரம் 100 வயது ராஜாமணி பாட்டிக் கொடுக்கும் லிவிங் டிப்ஸ்.! 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை பகுதிக்கு அருகில் ஆதியூர் எனும் கிராமம் அமைந்து இருக்கிறது. இந்த கிராமத்தில் ராஜமணி எனும் மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது நூறாவது வயது பிறந்த நாளை தன்னுடைய 52 பேத்தி பேரன்களுடன் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார். அதாவது, இந்த மூதாட்டிக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களின் மூலம் கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி பேரன் என்று மொத்தம் 52 வாரிசுகள் இருக்கின்றன. 50 வயது வரை … Read more