அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த … Read more

வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திரு​வள்​ளூரில் 7 ஆண்​டு​களாக வழிப்​பறி கொள்​ளை​யரை கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் 17.5 பவுன் நகைகளை பறிகொடுத்த மூதாட்​டிக்கு ரூ. 4 லட்​சம் இழப்​பீ​டாக வழங்க தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்​தி, இது​போன்ற வழக்​கு​களில் இழப்​பீட்​டுத்​தொகையை அதி​கரித்து வழங்​கு​வது தொடர்​பாக தமிழக அரசும் அரசாணை​யில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளார். திரு​வள்​ளூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (68) கடந்த 2018-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி தனது கணவர் பழனி​யுடன் மருத்​துவ பரிசோதனைக்​காக சாலை​யில் … Read more

தெரு நாய் விவகாரம்… சீமான் சொல்லும் முக்கிய பாயிண்ட் – அரசு என்ன செய்ய வேண்டும்?

Seeman News: வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கவலை தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்​சேரி​யில் இன்​றும் நாளை​யும் (செப். 4 மற்​றும் 5) ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.  இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குநர் பா.செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் செப். 2-ம் தேதி (செவ்​வாய்க்​கிழமை) மழை பெய்​துள்​ளது. குறிப்​பாக, வேலூரில் 11 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகம், … Read more

முதன்முறை வீடுகட்டும் கட்டிட அனுமதி திட்டத்தில் கூடுதல் வசதி -தமிழக அரசு குட் நியூஸ்

Tamil Nadu Latest News: குடியிருப்பு கட்டுமானத்திற்கு வீடுகட்டும் கட்டிட அனுமதி திட்டத்தில் மூலம் தூண் தளம், 2வது தளம் வரை என கூடுதல் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

“அமைச்சர் பிடிஆர் குறிப்பிட்ட ‘ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு’ விசாரிக்கப்படும்” – மதுரையில் இபிஎஸ் உறுதி

மதுரை: “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30 ஆயிரம் கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட டிஎம் கோர்ட், மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓபுளாபடித்துறை பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று இரவு: “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன்பு முதல்வரின் … Read more

"நான் முதல்வன்" திட்டத்தில் புதிய அப்டேட்! மாணவர்களுக்கான குட் நியூஸ்

Tamil Nadu Government : நான் முதல்வன்” திட்டத்தில் புதிய வசதியாக ‘தமிழ்நாடு திறன் பதிவேடு’ வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. முழு விவிரம்  

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

கடலூர்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் எதிர்வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. எதிர்வரும் தேர்தலை அதிமுக மற்றும் பாஜக இணைந்து எதிர்கொள்ளும் என சில முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கடந்த … Read more

10 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய உத்தரவு

TN SSLC Marksheet 2025, TN HSC Exam Update : 10 ஆம் வகுப்பு அசல் மதிபெண் சான்றிதழ் விநியோகம் இன்று தொடங்கிய நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்: ரூ.1,964 கோடியில் ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ நிலையம் வரை விரிவாக்கத் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகள் மேற்கொள்ள, ரூ.1,963.63 கோடி செலவில் ஒப்புதல் வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டம் அறிவிக்கப்பட்டு, நீண்ட காலமாக ஒப்புதல் கிடைக்காமல் இருந்து … Read more