தஞ்சை அருகே நள்ளிரவில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின் கம்பி அறுந்து விழுந்தது: ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்
திருவிடைமருதூர்: தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில், தரங்கம்பாடி சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் கும்பகோணத்தில் இருந்து மங்கநல்லூர் பொதுப்பணித்துறைக்கு டீசல் ஏற்றிக்கொண்டு லாரி நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில்வே கேட்டில் லாரி மோதியதில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சிக்னலுக்கு மின்சார இணைப்பு … Read more