குமரி முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், மழை ஓய்ந்து மீண்டும் வெயில் கொளுத்திவந்தது. இந்நிலையில் மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. திருவட்டார், குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலையும் மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கன மழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை வரை அதிகபட்சமாக கன்னிமாரில் 117 மி.மீ மழை பெய்திருந்தது. மலையோர பகுதியில் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை … Read more

லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா.சு: ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்தது என்ன?

லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா.சு: ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்தது என்ன? Source link

செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டி.ஜி.பி – எழுத்தாளருக்கு 5,000 வெகுமதி.!

இன்று சென்னையில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தீடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவர் காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள் மற்றும் குற்றச்சம்மந்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.  மேலும், அங்கு சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரணை செய்தார். அதன் பின்னர், காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் நிறை குறைகளை … Read more

“ஆளுநர்கள் எவரும் வாரிசு அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள் அல்ல” – கனிமொழிக்கு தமிழிசை பதில்

புதுச்சேரி: “ஆளுநர்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தகுதியின் அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள். வாரிசு அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள் இல்லை” என்று திமுக எம்.பி. கனிமொழிக்கு பதிலளிக்கும் வகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பிரசா முண்டா பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கவுரவ தின விழா, காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் நமச்சிவாயம், … Read more

சிபிசிஐடி எஸ்பி தலைமையில் கொடநாடு வழக்கு விசாரிக்க 49 பேர் அடங்கிய தனிப்படை

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க எஸ்பி மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படையை சிபிசிஐடி அமைத்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23ம் தேதி நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தற்போது சிபிசிஐடி எஸ்பி மாதவன் தலைமையில் கூடுதல் எஸ்பி முருகவேல், … Read more

சென்னை – பெங்களூரு இடையே 160 கி.மீ வேகத்தில் பறக்கப் போகும் ரயில்கள்

சென்னை: சென்னை – பெங்களூரு இடையில் 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் வழித்தடங்களில் உச்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பல்வேறு வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக, ‘வந்தே பாரத்’ ரயில் இயங்கும் சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் 160 கி.மீ … Read more

கார்த்திகை தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம் கோலாகலம் சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் பவனி

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தில் தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரரும், சிம்ம வாகனத்தில் அண்ணாமலையாரும் பக்தர்களுக்கு அருள்பலித்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3ம் நாளான நேற்று அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள், அலங்கார ஆராதனை நடந்தது. பிரதோஷ மண்டபத்தில், 1008 சங்காபிஷேகம் நடந்தது. காலையில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், … Read more

13 வயது சிறுமிக்கு 2 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் கபிலர் நகர் செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் பிவின். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.  இவர், கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது சிறுமியை தன்னுடைய வீட்டு மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை தந்த பின்னர், அந்த சிறுமியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.  அதுமட்டுமல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிவின் அந்த சிறுமியை … Read more

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஜைக்கா நிறுவனம் இதுவரை நிதி விடுவிக்கவில்லை: ஆர்டிஐ பதிலில் தகவல்

மதுரை: இதுவரை ஜைக்கா நிறுவனம், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி விடுவிக்கவில்லை என்று ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணி எப்போது முடியும் என விளக்கமிளக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதனால், மத்திய அரசு … Read more