பெங்களுரில் இருந்து இறக்குமதியாகும் கஞ்சா! விசாரணையில் அம்பலமான உண்மை

தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையும் போதைபொருள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் சட்ட விரோதமாக   குட்கா விற்பனை செய்து வந்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பெட்டி கடைகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விநியோகம் செய்யவதாக காவல்துறைக்கு ரகசிய … Read more

வரதட்சணைக் கொடுமை: தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி மனைவியை கத்தியால் வெட்டிய காதல் கணவர்!

வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததால் தாய் வீட்டுக்கு வந்த மனைவியை 6 மாத கர்ப்பணி என்றும் பாராமல் கணவன் வெட்டிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை அயனாவரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் இயேசு ரத்தினம் – ஸ்டெல்லா மேரி தம்பதியர். இவர்களது மகள் டெபோரா அதே பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திருமணமான மூன்று மாதத்தில் … Read more

அரசு ஊழியர்கள் மூவரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்த ஆட்சியர்!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் செய்தல், புகைப்படம் மாற்றி அமைப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா திடீரென ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் சத்துணவு அமைப்பாளர், கிராம உதவி உதவியாளர், சத்துணவு பணியாளர் உட்பட 7 பேரை தற்காலிகமாக … Read more

பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம் – புதுச்சேரி ஆதிதிராவிடர் விடுதிகளில் பயிலும் மாணவர்கள் வேதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயிலும் விடுதிகளில் ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்காக புதுச்சேரியில் 16, காரைக்காலில் 10, ஏனாமில் 2 என மொத்தம் 28 விடுதிகள் உள்ளன. ஏழ்மை நிலையிலுள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் இந்த விடுதிகளில் தங்கி கல்வி பயில்கின்றனர். ஆனால், விடுதிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவிடப்படாததால் அவை மோசமாக இயங்கி வருவதாக மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர். விடுதியில் வழங்கப்பட்டு வந்த … Read more

கார்த்திகை தீபத்திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது

திருண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இன்று காலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.  இந்த சிறப்பு விழாவில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன், அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் … Read more

காலை 6 டூ இரவு 10: இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை!

தச்சூரில் இருந்து பொன்னேரி வழியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வரை நாளை (28 ஆம் தேதி) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தெரிவித்துள்ளார். மீஞ்சூர் பகுதியைச் சுற்றியுள்ள துறைமுகங்கள், சரக்கு பெட்டக முனையங்களில் இருந்து ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுசாலை வழியாக … Read more

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவுக்கு பரவும் ஆபத்து உள்ளதா?

தீவிர கொரோனா பரவலால் சீன தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஷாங்காய், குவாங்சோ, செங்டு, ஜினான், லான்ஸோ, ஜிலின் ஆகிய பகுதிகளில் தொற்று அதிகரித்திருப்பதால், வணிக வளாகங்கள் ஸ்தம்பித்துள்ளன. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் உச்சம் தொட தடுப்பூசி விகிதமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 93 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் … Read more

திருமணத்திற்குப் பிறகு திரையில் காணாமல் போன புகழ்பெற்ற நடிகைகள்

மும்பை: திருமணத்திற்குப் பிறகு திரையில் காணாமல் போன புகழ்பெற்ற நடிகைகள் சிலர் குறித்து தற்போது பார்ப்போம். நம்ரதா ஷிரோத்கர்: 1993ல் மிஸ் பெமினாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்டுகளில் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் நம்ரதா ஷிரோத்கர். அடியெடுத்துவைத்த வேகத்திலேயே இந்தி, பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என வலம் வரத் தொடங்கினார். வம்சி எனும் தெலுங்கு படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்தார் நம்ரதா ஷிரோத்கர். அந்த ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தது. இதையடுத்து … Read more

அதென்ன NCMC கார்டு? இன்னும் ஒரே மாதம்… சென்னை மெட்ரோ பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!

தலைநகர் சென்னையில் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது சொகுசு பயணமாகவும் விளங்குகிறது. குறிப்பாக அலுவலகம் செல்வோருக்கு மிகப்பெரிய வரப் பிரசாதமாக உள்ளது. இதில் பயணிக்க டிக்கெட் வாங்குவதற்கு பதிலாக மெட்ரோ கார்டுகள் வாங்கினால் சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. மெட்ரோ ரயில் கார்டுகள் இந்த கார்டை அவ்வப்போது ரிசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதற்கான வசதிகள் மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் வாங்கும் போது ஏற்படும் … Read more

தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழகம் முழுவதும் இருக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகளை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, நாகையில் தனியார் திருமண அரங்கில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “தொழிற்சாலைகளில் 80% வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு இன்று … Read more