இனிமே ஒரே ஜாலி தான்…. அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா ஆரம்பம்.!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அனைத்து கலை வடிவங்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாகவும், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்தக் கலைத் திருவிழாவின் குறிக்கோள் ஆகும்.  அந்த வகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் இந்த கலைத் திருவிழா நடத்தப்பட உள்ளது.  அதன்படி, இன்று முதல் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு … Read more

தெரிஞ்சிக்கோங்க..!! இனி பிராங்க் வீடியோ பெயரில் மக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை

சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் ,கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய 5 யூடியூப் சேனல்கள் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . குறிப்பாக இரண்டு யூடியூப் சேனல்களின் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சம்மனுக்கு ஆஜரான … Read more

சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும டைரக்டர் ஜெனரலாக மீனாகுமாரி நியமனம்

சென்னை: தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த மருத்துவர் கே.கனகவல்லி விருப்பத்தின்பேரில், மாநில அரசு சித்த மருத்துவப் பணியிடத்துக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராக உள்ள மருத்துவர் ஆர்.மீனாகுமாரிக்கு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய … Read more

அரசு கேபிள் சேவை! உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அரசு கேபிள் டிவி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகி ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் . இந்த நிலையில், அரசு கேபிள் டிவி சேவை … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (24.11.2022) பெண்களுக்கான மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.  இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் நாளை (நவம்பர் 24ம் தேதி) திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் … Read more

அமேசானை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்..!!

செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதைத்தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து … Read more

சென்னையில் குளிர் ஏன்? – வானிலை மையம் விளக்கம்

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுவிழந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது. தொடர்ந்து, இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கக்கூடும். இதன்காரணமாக, வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த … Read more

அதிமுக திட்டங்களுக்கு முட்டுக்கட்டை.. திமுக மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

அதிமுக திட்டங்களுக்கு முட்டுக்கட்டை.. திமுக மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகார் Source link

கோவை: விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது.!

கோவை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சார்ஜாவில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. மேலும் இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு வாலிபரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில், அவரது பையில் 200 கிராம் தங்கம் … Read more