கேட்கும் போதே மனசு பதறுது ..!! 4 வயது சிறுமியை நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்ற பாலியல் கொடுமை செய்த கயவன்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதியில் வசித்து வருபவர் லியாகத் (48). ஓட்டல் தொழிலாளியான இவர், அதே பகுதியில் 4 வயது சிறுமியிடம் நன்றாக பேசி வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினர் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில், நேற்று தன்னுடைய வீட்டிற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் ஒருபுறம் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி விளையாடும் இடங்களிலும், அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் சிறுமி இல்லாததால் … Read more

இந்து கடவுளை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க சட்டம் கொண்டு வரவேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர்

இந்து கடவுளை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார். திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோயிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருவேங்கட பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்படவேண்டும். இந்து மதத்தை அவதூறாக … Read more

இலங்கை கடற்படை அட்டகாசம் வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: வலைகளை அறுத்து எறிந்து ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவில் வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மிரட்டி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் படகுகளை உடனடியாக வேறு பகுதிக்கு ஓட்டிச் சென்றனர்.  ஆனாலும், விடாமல் துரத்திவந்த இலங்கை கடற்படையினர், பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் … Read more

திமுக பழுத்த மரம் மட்டுமல்ல கல் கோட்டை – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!

சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, “தமிழர்களின் சுயமரியாதை மற்றும் தமிழகத்தின் நலனை காக்கின்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். உங்களில் ஒருவனான தன்னை தலைவராக தேர்ந்தெடுத்த கோடான கோடி தொண்டர்களுக்கு நன்றி. ஒவ்வொரு உடன்பிறப்பாலும் நான் தலைவராகியிருக்கிறேன்.  நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கலைஞர் மறைவிற்கு பிறகு இந்த எளியன் தலையில் தலைமை பொறுப்பு சுமத்தப்பட்டது. உழைப்பு, உழைப்பு என்று பாராட்டப்பெற்றதால் கிடைத்த பொறுப்பு இது … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு..!!

தேர்தல் ஆணைய விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளையும் நியமிக்க வேண்டும். அந்த வகையில், தற்போது திமுகவில் 15-வது முறையாக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டமாக பேரூராட்சி, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரம் வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் … Read more

அக்.17, 20, 26 தேதிகளில் அதிமுக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் அக்.17,20, 26-ல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக, பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, அக்.17-ம் தேதி 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, கட்சிரீதியான மாவட்டங்கள், புதுச்சேரி,கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அக்.17, 20, 26 ஆகிய3 நாட்களும் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் … Read more

கொடநாடு கொலை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 2 கூடுதல் டிஎஸ்பிக்கள், 3 டிஎஸ்பிகள், அடங்கிய தனிப்படை அமைத்து சிபிசிஐடி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017ல் நடந்த கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.   சசிகலா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். விரைவில் விசாரணை துவங்க … Read more

ஆளுனர் ஆர்.என் ரவிக்கு திருக்குறள் அனுப்பிய கோவை வாலிபர் சங்கம்: படித்துவிட்டு கருத்து சொல்ல கோரிக்கை

ஆளுனர் ஆர்.என் ரவிக்கு திருக்குறள் அனுப்பிய கோவை வாலிபர் சங்கம்: படித்துவிட்டு கருத்து சொல்ல கோரிக்கை Source link

இந்து கடவுள்களை விமர்சிப்பவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வரவேண்டும் – சடகோப ராமானுஜர்.!

இந்து கடவுள்களை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப இராமானுஜ ஜீயர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோயிலில் நேற்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருவேங்கட பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய … Read more

கமுதி அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 50 ஆடுகள் பலியிட்டு ‘கமகம’ விருந்து: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே  முதல்நாடு கிராமத்தின் கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா நடைபெறுகிறது. இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு ஆண்கள் ஒன்றுகூடி  மண்ணால் பீடம் அமைத்து எல்லைப்பிடாரி அம்மன் உருவம் செய்தனர்.  பின்னர் கைக்குத்தல் பச்சரிசி கொண்டு சாதம் வடித்தனர். இதனை உருண்டைகளாக உருட்டி பீடத்திற்கு முன்பு வைத்தனர். இதன்பிறகு … Read more