எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு | கர்நாடகம் போல் தமிழகத்திலும் துணிச்சல் நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: கர்நாடகத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும், அம்மாநில அரசை தமிழகம் பின்பற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 3%-ல் இருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூக நீதி காக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தில் பட்டியலின … Read more