"கவர்னர் என்றால் பிரச்சனை செய்பவர் அல்ல" – தமிழிசை!

தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. ஆன்மீகத் தமிழ் தான் நமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. சில பேரின் சூழ்ச்சியினால் ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என ஒரு கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், இது தவறானது. தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு பேட்டி அளித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி … Read more

கடித்ததோடு சிறுவனின் மேலேயே படுத்த பாம்புகள்.. தந்தையின் செயலால் மருத்துவமனையில் பரபரப்பு

திருத்தணியில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை கடித்த கட்டு விரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை கையோடு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரது 7 வயது மகனுடன் நேற்றிரவு வழக்கம்போல வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகனை கடித்த கட்டு விரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகள் சிறுவன் மேலேயே படுத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு … Read more

மூத்த தலைவர் காலமானார்.. காங்கிரஸ் கமிட்டி இரங்கல்..!

அருணாசல பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான துப்டன் தெம்பா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சராக இருந்தவர் துப்டன் தெம்பா. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஆர்.கே.மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், அவரது உடல்நலம் நேற்று மோசமடைந்தது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று … Read more

வானிலை முன்னறிவிப்பு: வட மாவட்டங்களில் 4 நாள் மழை எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 8,9,10 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். 8,9,10,11-ம் தேதிகளில் திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி … Read more

‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலர் – 2022 | சென்னையில் துர்கா ஸ்டாலின் வெளியிட்டார்: இன்று முதல் விற்பனைக்கு வருகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ – 2022 தீபாவளி மலரை, சென்னையில் துர்கா ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். இன்று முதல் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. பிரத்யேக க்யூஆர் கோடு, வாட்ஸ்அப் எண் உள்ளிட்ட ஆன்லைன் வழியாகவும் தீபாவளி மலர் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் கடந்த 2013 முதல் தீபாவளி மலர் வெளியாகி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி மலர், 260 … Read more

மது பழக்கத்திற்கு அடிமையான காவலர்.. அறிவுரை கூறி நல்வழிப்படுத்திய உதவி ஆணையர்

மது பழக்கத்திற்கு ஆளான காவலருக்கு அறிவுரைகூறி நல்வழி படுத்தும் ஆயுதப்படை உதவி ஆணையரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆயுதப்படை உதவி கமிஷனர் கண்ணபிரான், மது பழக்கத்திற்கு உள்ளன காவலர் ஒருவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை அழைத்து அறிவுரை கூறிய அவர், குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்று அந்த காவலர் மனம் திருந்தி விரதமிருந்து மாலை அணிவித்துக் கொள்ள விரும்பி அதனை ஆயுத … Read more

5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் அதிரடி கைது!!

சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த தீபன் (32) என்பவர், நீண்ட நாட்களாக திருமணத்துக்கு பெண் பார்த்தும் கிடைக்காத நிலையில், தன்னைவிட வயதில் மூத்த சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த அருள்ஜோதி (36) என்பவரை ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது அருள்ஜோதிக்கு, தீபன் 15 பவுன் நகை போட்டுள்ளார். ஒரு மாதமாக தீபனுடன் குடும்பம் நடத்தி வந்த அருள்ஜோதி திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் தீபன், கிச்சிபாளையம் வந்து விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு … Read more

நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.1 லட்சம் பணம் மோசடி செய்த இளைஞர் கைது

சென்னை: திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்த இளைஞரை போரூர் போலீஸார் கைது செய்தனர். பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி (59). இவர், சென்னை போரூர், அய்யப்பன்தாங்கல் விஜிஎன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சினிமா துறையைச் சேர்ந்த … Read more