இன்று குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் குறைதீர் கூட்டம், 15 பகுதி அலுவலகங்களிலும் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் இன்று (அக்.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீர் வாரியத்தின் 15 இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறைதீர்க்கும் … Read more

36ஆவது தேசிய விளையாட்டு போட்டி: தனி நீதிபதி உத்தரவு ரத்து!

குஜராத்தில் நடக்கும் 36ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் தேர்வு செய்த வீரர்களை அனுமதிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 36ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் சார்பில் கலந்து கொள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கு குழு ஒன்றை நியமித்து இந்திய வாலிபால் கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து … Read more

விருந்து நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் பலி

திருவாரூர்: திருவாரூர் அருகே திருவாசல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (29). இவரது மனைவி மாரியம்மாள் (26). இவர், 5 மாத கர்ப்பமாக உள்ளார். அவருக்கு, 5ம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு சாதங்களுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் வேலுக்குடி கிராமத்தை சேர்ந்த பிஎஸ்என்எல் மோடம் நெட்வொர்க்  ஒப்பந்த நிறுவன மேலாளர் செல்வமுருகன் (24), … Read more

பிரபல நடிகையை கடைக்குள் வைத்து ஷட்டரை மூடிய ஊழியர்கள்!!

மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அன்னா ரேஷ்மா ராஜன், தனது அம்மாவின் செல்போனிலுள்ள சிம்கார்ட்டில் பிரச்னை ஏற்பட்டதால் வேறு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றார். பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, தலையை துப்பட்டாவால் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள 25 வயது பெண் மேலாளர் இவரிடம் முறையாக பதில் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அவர் குறித்து புகார் அளிக்க அவரை புகைப்படம் எடுத்துள்ளார். தன்னை … Read more

வெறும் வாழ்க்கை நெறி நூல் அல்ல, நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் – வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க ஆளுநர் வேண்டுகோள்

சென்னை: ஆன்மிகத்தின் ஆதாரமாக விளங்கும் திருக்குறள் வெறும் வாழ்க்கைநெறி நூலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறது. அதை வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். குறள் மலைச் சங்கம் சார்பில் ‘திருக்குறள் மாநாடு – 2022’, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நேற்று நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்தார். ‘திருக்குறள் உலகுக்கான நூல்’ என்ற நூலையும் வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது: … Read more

ராணுவ வீரர் சாவில் திருப்பம், கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற மனைவி; கள்ளக்காதலனுடன் அதிரடி கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் விஏகே நகர் பகுதியில் வசித்தவர் வெற்றிவேல்(42) ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி அதிகாலை வீட்டில் வெற்றிவேல் மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து ரேவதியிடம் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்யப்பட்டது  தெரியவந்தது. … Read more

போடாத சாலைக்கு ₹5 கோடி பட்டுவாடா வேறா? – RTI மூலம் அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம்!

சாலை போடாமலேயே 5 கோடி ரூபாயை ஒப்பந்ததாரருக்கு பட்டுவாடா செய்ததாக கரூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம்குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அறப்போர் இயக்கத்தினர் அறிக்கை ஒன்றில் குற்றம்சாட்டியுள்ளனர். குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது பற்றி விளக்கமளிக்க வேண்டுமென அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/1l_msc65gdo” title=”YouTube video player” frameborder=”0″ … Read more

திருப்பதியில் பக்தர்கள் நிரம்பி வழிவதால் இலவச தரிசனத்துக்கு 48 மணிநேரம் ஆகிறது..!!

புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதன்படி புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று (8-ந்தேதி) திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி கோவில் அருகே கோகர்ப்பம் அணை வரை 6 கிலோ மீட்டா் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஷெட்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். … Read more

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் – இந்தியா புறக்கணிப்புக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கை போரில் … Read more

10-ம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம்; மாஜி அமைச்சர்கள் 3 பேருடன் எடப்பாடி ரகசிய ஆலோசனை

சேலம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து 3 மாஜி அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி இரவில் ரகசிய ஆலோசனை நடத்தினார். அதிமுகவை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினரும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வரும் 10ம்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் … Read more