சுற்றுலா பயணிகளை கவரும் காட்டு டேலியா மலர்கள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் பூத்துள்ள காட்டு டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் ஆகிய உள்ளன. இந்த பூங்காக்களில் பல வகையான மலர்கள் மற்றும்  அழகு தாவரங்கள் காணப்படுகிறது. இதனை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இது ஒரு புறம் இருக்க நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் … Read more

பருவமழை முன்னெச்சரிக்கையாக 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன-அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என்றும், மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் போஜராஜன் நகருடன் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் 13.4 கோடி செலவில் ரயில்வே பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வண்ணாரப்பேட்டையில் பெற்றது. அதில் அமைச்சர்கள் கே என் நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து … Read more

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி..!

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு, தூத்துக்குடி தொகுதி எம்பியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி தேர்வு செய்யப்படுகிறார். நாளை மறுநாள் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில், மகளிருக்கான துணைப்பொதுச்செயலாளர் பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்தப் பதவிக்கு கனிமொழி எம்பி தேர்வு செய்யப்படுகிறார். திமுகவின் மகளிர் அணி செயலாளராக உள்ள கனிமொழி, புதிய … Read more

பாரம்பரிய சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதித்திடுக: சென்னையில் மீனவர்கள் போராட்டம் 

சென்னை: பாரம்பரிய சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, சுருக்கு வலையைப் பயன்படுத்த அனுமதி வழங்க கோரி சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடல்பகுதிகளின் வளம் மற்றும் மீன் வளங்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு … Read more

சரியான நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய எடப்பாடி: தமிழ் மகன் உசேனுக்கு என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலசாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில், மீண்டும் தமிழகத்தில் அதிமுக இடைகால பொதுசெயலாளர் எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திடவேண்டும் என அதிமுக அவைதலைவரும், முன்னால் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் சிறப்பு பிரதாத்தனை செய்து வழிபட்டார். பின்னர் தமிழ்மகன் உசேன் அதிமுகவினர் மத்தியில் பேசுகையில், “மீண்டும் தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிராத்தனை செய்து வருகிறேன். 31ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் … Read more

தொடர் விடுமுறையால் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்: 3 நாளில் 20 ஆயிரம் பேர் சுருளி அருவியில் குளியல்

கம்பம்: தொடர் விடுமுறை காரணமாக, சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாபயணிகளிடம் வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த … Read more

டி20 உலகக் கோப்பையில் அந்த இருவர் இல்லாதது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு – ரவி சாஸ்திரி

டி-20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் இடம்பெறாதது வருத்தம் அளித்தாலும் இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி தெரிவித்தார். சென்னை போருர் அருகே கௌப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் காசி … Read more

வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம்.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

புதுசேரியில், சாலை பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்ட சபை வளாகத்தில் நடந்தது.அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு செயலர்கள் அருண், கேசவன், முத்தம்மா, ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், உள்ளாட்சித் துறை இயக்குநர் ரவிதீப் சிங் சஹார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், புதுச்சேரியில் சாலை விபத்துகளை தவிர்ப்பது மற்றும் குறைப்பது தொடர்பான ஆலோசனை … Read more

சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் திமுகவிலிருந்து விலகினார்? சீமான் சொல்லும் காரணம்!

திமுகவிலிருந்து ஏன் விலகினார் என்ற கேள்வி தமிழக அரசியலில் வட்டமடித்து வரும் நிலையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் அதற்கான காரணமாக நூறு நாள் வேலை திட்டத்தை குறிப்பிடுகிறார். திமுகவிலிருந்து விலகிய நிலையில் அவரை வரவேற்று கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். உங்களை … Read more

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதரவற்ற … Read more