ஓய்வு பெற்ற பெண் நீதிபதி, சென்னை பெண் உள்ளிட்டோரிடம் போலி உயில், பத்திரப்பதிவு மூலம் ரூ.23 கோடி சொத்துக்கள் அபகரிப்பு: தென்மண்டல ஐஜியிடம் புகார்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் நேற்று அளித்த புகார் மனு: திருமங்கலம் அருகே ஆலம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரியின் ரூ.5 கோடி மதிப்புள்ள அட்டை கம்பெனி, சென்னை பட்டிமேட்டை சேர்ந்த தீப ஆனந்திக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள ரூ.15 கோடி மதிப்பிலான இடம், திருமங்கலம் மேலக்கோட்டை அருகில் உள்ள ரூ.3 கோடி மதிப்பிலான கெமிக்கல் கம்பெனி என அப்பகுதியில் உள்ளவர்களின் பலரது சொத்துக்களை … Read more

மதுரை ‘எய்ம்ஸ்’ காலதாமதத்துக்கு மத்திய அரசின் அக்கறையின்மையே காரணம்: சு.வெங்கடேசன்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்காததே பணிகள் தொடங்கப்படாததற்குக் காரணம் என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு பிப். 28-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள தோப்பூரில் இந்த மருத்துவமனையை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி … Read more

தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி மோசடி பாஜ பிரமுகரின் 9 அலுவலகம் 3 வீடுகளில் போலீஸ் சோதனை: பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி நடவடிக்கை, சேலத்தில் ரூ.1.82 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்

சேலம்: தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட சேலம் பாஜ பிரமுகரின் 9 அலுவலகங்கள், 3 வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சேலம் தாதகாப்பட்டி குமரன்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51), பாஜ பிரமுகரான இவர், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட்வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தினார். இந்நிறுவனத்தின் கிளைகளை வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, நீலகிரி, கன்னியாகுமரி என … Read more

தமிழக முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கு | இந்து முன்னணி நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: தமிழக முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் இந்து முன்னணி துணைத் தலைவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் பால்ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த செப்டம்பர் 17- ல் திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், தந்தை பெரியார் மற்றும் தமிழக முதல்வரை அவதூறாகவும் பேசியதாக போலீசார் என்னை கைது செய்தனர். … Read more

எடப்பாடி செம ஹேப்பி; கொடநாடு வழக்கில் புதிய திருப்பம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 1991-1996 அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கட்சி மற்றும் ஆட்சி ரீதியில் பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த பங்களாவில் இருந்து எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு கொடநாடு எஸ்டேட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் காவலாளி ஓம்பகதூரை கொலை … Read more

மனைவி, குழந்தைகள் சாவுக்கு காரணம் என கைது ஜாமீனில் வந்த விவசாயி குலதெய்வ கோயிலில் தற்கொலை

காடையாம்பட்டி: காடையாம்பட்டி அருகே மனைவி மற்றும் குழந்தைகள் தற்கொலைக்கு காரணம் என கைதான விவசாயி, ஜாமீனில் வௌியில் வந்து குலதெய்வ கோயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கே.மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவரது மனைவி மரகதம் (30). செல்வகணபதி(7) கோகுலக்கண்ணன் (5) என 2 மகன்களும் இருந்தனர். விவசாயியான பிரபாகரன், தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை உருக்கி விற்பனை செய்யும் கம்பெனியும் நடத்தி வந்தார். இந்நிலையில், கணவன் வேறு … Read more

”நண்பருடன் சேர்ந்து எனது குழந்தையை கலைக்க திவ்யா முயற்சி செய்கிறார்” – நடிகர் அரணவ் புகார்

நண்பருடன் சேர்ந்து கொண்டு தனது குழந்தையை கலைக்க நடிகை திவ்யா முயற்சி செய்வதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் நடிகரும் அவரது கணவருமான அரணவ் புகார் மனு அளித்துள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது என்கின்ற அரணவ். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவரும் தனியார் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மேலும், … Read more

புதுவையில் விஹெச்பி சார்பில் துர்கை பூஜை – ஊர்வலத்தை தொடங்கிவைத்த சட்டப்பேரவைத் தலைவர்

புதுச்சேரி: விஸ்வ ஹிந்து பரிஹத் சார்பில் புதுச்சேரியில் நடந்த துர்கை பூஜை ஊர்வலத்தை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார். மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புதுவையில் வசித்து வருகின்றனர். இவர்கள் சார்பில் துர்கா பூஜை நடைபெற்றது. துர்கா பூஜை விழாவில் 9 நாட்கள் விரதம் இருந்து 10-வது நாள் துர்கை சிலையை கடலில் கரைப்பது வழக்கம். கரோனா பெருந்தொற்று … Read more

'தாய் கிழவி' பாடலுக்கு குத்தாட்டம் போடும் பள்ளி சிறுவர்கள்… இதெல்லாம் டூ மச்…

மாணவர்கள் கல்வியை கற்றுக்கொள்ளும் இடமாக மட்டும் இல்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளும் இடமாக பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஒரு காலத்தில் வீட்டு பாடங்களை எழுதுறோமே, தேர்வில் தேர்ச்சி பெருகிறோமோ ஒழுக்கமாக இருக்கனும் என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கும். ஆசிரியரின் கம்பு மீதும் பெற்றோர் மீதும் இருந்த அச்சம்தான் அந்த ஒழுக்கத்துக்கு காரணமாக இருந்தது. ஆசிரியர்களால் அடி வாங்கி, பல பனிஷ்மெண்டுகளை கடந்து வந்தவர்கள் கூட இப்போது அவர்களது ஆசிரியர்கள் மீது எந்த வன்மமும் இருக்காது. ஆனால், இன்று பள்ளிக்கூடங்களில் சூழல் … Read more

திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பரிதாப பலி: மேலும் 12 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியானார்கள்.   வாந்தி, மயக்கத்துடன் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பூர் அருகே அவினாசி, பூண்டி ரிங் ரோட்டில்  விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த சேவாலயத்தில் ஆதரவற்ற மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவர்கள் மற்றும் சிலர் தங்கியுள்ளனர். மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தினமும் ஒவ்வொரு வகையான உணவு … Read more