தமிழ்நாட்டுக்கு வாங்க.. எல்லா வசதியும் இருக்கு: தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் அழைப்பு!

இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், ஏற்றுமதியில் மூன்றாவதாகவும், தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாகவும் உள்ளது. எனவே செக் குடியரசு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செக் குடியரசு சர்வதேச கண்காட்சியில் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV … Read more

2048 வீரர்கள்.. 121 பல்நோக்கு மையங்கள்.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்

Weather Update in Tamil Nadu: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 2048 பேரிடர் மீட்பு வீரர்கள் தயாராக உள்ளனர் மற்றும் மழை மட்டுமின்றி புயலினை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை எழிலகத்தில் உள்ள … Read more

பக்தி கோஷங்கள் விண்ணதிர குலசை முத்தாரம்மன் கோயிலில் மகிஷாசூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய தரிசனம்

உடன்குடி: லட்சக்கணக்கான பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷம் விண்ணதிர குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. மைசூருக்கு அடுத்த படியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி 25ம் தேதி காளி பூஜை, சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது. 26ம் தேதி அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, சிறப்பு அபிஷேகம், … Read more

சின்னசேலம் அருகே மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்கு மிரட்டல்

சின்னசேலம் அருகே சுடுகாடு செல்லும் வழியில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சி விற்பனையாளர்களை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அச்சுறுத்தி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியின் அனுமதியோடு, சுடுகாடு செல்லும் வழியில் , கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சிலர், மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை எங்களுக்கு செலுத்தினால் தொடர்ந்து கடை நடத்தலாம். மீறி விற்பனை செய்தால், உங்கள் கடைகள் … Read more

நித்யானந்தாவின் கைலாசா விருதுகள்: திருச்சி சூர்யாவிற்கு விருது அறிவிப்பு!

திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகனும், பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக உள்ள திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா. அதற்கு நன்றி கூறும் விதமாக தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார் சூர்யா சிவா. தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா, தனக்கென்று கைலாசா என்ற தனி நாட்டினை உருவாக்கி அங்கு தற்போது இருக்கிறார். கைலாசா என்ற நாட்டுக்கு தான் அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட … Read more

சிக்கல் சிங்கார வேலனை தரிசித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன்

சென்னை: சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த அவருக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான காசி விஸ்வநாதன் சண்முகம் தற்போது சாமி தரிசனம் செய்வதற்கு தமிழகம் வருகை தந்துள்ளார். குறிப்பாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி  விஸ்வநாதன் சண்முகம் ஒரு முருக பக்தர் ஆவார். ஆண்டுக்கு இரு முறை தமிழகம் … Read more

சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைப்பு: திருப்பூர் காவல் ஆணையர் தகவல்

திருப்பூர்: சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். நேற்று காலை இட்லி, சட்னி, வெண்பொங்கல், கொண்டைக்கடலை குழம்பு உட்கொண்டனர். உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிட்டதால் காய்ச்சல் ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ அறிக்கை வந்த பின்பே தெரியும் எனவும் கூறினார்.

சிதம்பரம் கோயிலில் 1955 முதல் 2005 வரை சரிபார்க்கப்பட்ட நகைகளை மீண்டும் ஆய்வு செய்ய சொல்வது உள்நோக்கம் கொண்டது: தீட்சிதர்களின் வழக்கறிஞர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1955-ம் ஆண்டு முதல் 2005 வரை, சரிபார்க்கப்பட்ட நகைகளை, மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுவது உள் நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர் களின் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் சிதம்பரத்தில் உள்ள அவரதுஅலுவலகத்தில் செய்தியாளர்க ளிடம் நேற்று கூறியது: சிதம்பரம் நடராஜர் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், 9 கட்டங்களாக நகைகளை சரி பார்த்து ஆய்வு செய் தனர். … Read more

மாரத்தான் ஓட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா போன்ற பெருந்தொற்றுகளுக்கும், இயான் புயல் போன்ற பேரிடர்களுக்கும் அடிப்படைக் காரணம் காலநிலை மாற்றமும், அதன் விளைவான புவி வெப்பமயமாதலும் தான். இந்த ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

விஜய தசமி விழா: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அம்பு போடும் நிகழ்ச்சி கோலாகலம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்க நாச்சியார் நவராத்திரி விழா கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி கடந்த 4ம் தேதி வரை 9 நாட்கள் நடந்தது. இந்நிலையில் விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி  உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு சிங்க பெருமாள் கோயில் ஆஸ்தான மண்டபத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஆஸ்தானமிருந்தபடி மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். … Read more