பைக்காரா படகு இல்லத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஊட்டி: ஆயுதபூஜை,  விஜயதசமி விடுமுறை திரொலி ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா  பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். நீலகிரி  மாவட்டம் ஊட்டி – கூடலூர் சாலையில் சுமார் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா  அணை அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மத்தியில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த  அணையில் உள்ள  நீரை கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பைக்காரா அணையில் இருந்து கடநாடு கூட்டு  குடிநீர் திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட … Read more

125 அரங்குகளுடன் திண்டுக்கல்லில் அக்.6-ம் தேதி புத்தக திருவிழா தொடக்கம்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், இலக்கியக் களம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா அக்.6-ல் தொடங்குகிறது. இது குறித்து ஆட்சியர் ச.விசாகன் கூறியதாவது: திண்டுக்கல் ட்டலி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அக்.6-ம்தேதி மாலை 6 மணிக்கு ஆட்சியர்தலைமையில் நடைபெறும் விழாவில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சு.ஸ்ரீமதி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். தினசரி காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழா அக்.16 வரை நடைபெறுகிறது. தொடக்க நாளன்று காலை … Read more

ஒன் சைடு கேம் ஆடுகிறார்க: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி குற்றச்சாட்டு!

மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலவசங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தேர்தல் ஆணைய கடிதத்துக்கும் முரண்பாடு இருக்கிறது. பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை விரைவாக நடத்த மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குதிரைப் பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதாக அறிக்கை தராததால் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த முடியவில்லை. … Read more

தொடர் விடுமுறையையொட்டி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: வனத்துறையினர் கண்காணிப்பு

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு, தொடர் விடுமுறையையொட்டி, சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும். கடந்த மாதம் துவக்கம் வரை அடிக்கடி பெய்த பருவமழையால், அவ்வப்போது  வெள்ளப்பெருக்கால், அந்நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்,  தண்ணீரின் … Read more

முதல்வரின் உத்தரவை மீறி மேயர், மண்டல தலைவரின் கணவர்கள் ஆய்வு: செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

முதல்வரின் உத்தரவை மீறி மதுரையில் மேயரின் கணவர், மத்திய மண்டலத் தலைவரின் கணவர் ஆய்வு செய்ததாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்படியே மதுரை மேயராக இந்திராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மத்திய மண்டல தலைவராக பாண்டிச்செல்வி உள்ளார். மதுரை மாநகராட்சி 76-வது வார்டில் பாதாள சாக்கடை, சுகாதாரப் பணிகள் … Read more

'போதாத ஊருக்கு வழி செல்லும் அமைச்சர்' – ஆர்.பி.உதயகுமார் பதிலடி!

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கம் வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள வேளாண்துறை அமைச்சரின் பதில் போகாத ஊருக்கு வழி சொல்வது போல் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:- “சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்த விவசாயம் செழிக்க தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு திட்டங்களை செய்தார். காவிரி நீர் மேலாண்மை மற்றும் முறைப்படுத்தும் குழுவை அமைத்திட நாடாளுமன்றத்தை 21 நாட்கள் முடக்கி அதன் மூலம், காவிரி பிரச்சினைக்கு … Read more

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு: தமிழிசை சௌந்தராஜன்

கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகதான் இருக்கின்றது எனவும் இருளில் முழ்கவில்லை என தெரிவித்தார்.4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது எனவும் சிலர் செய்த பிரச்சினையால் மின் தடை ஏற்பட்ட நிலையில் மாற்று நடவடிக்கை எடுத்து … Read more

தர்மபுரி ரயில் நிலையம் மூலம் ஆண்டுக்கு 3.50 லட்சம் டன் சரக்குகள் பரிமாற்றம்; 500 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு

தர்மபுரி: தர்மபுரி ரயில் நிலையத்தில் சரக்கு கையாளும் விதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3.50 லட்சம் டன் சரக்குகள் இங்கு பரிமாற்றம் செய்யப்படுவதால், 500 தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. தர்மபுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம், கடந்த 1906 ஜனவரி 16ம் தேதி ஆங்கிலேயர் காலத்தில், மீட்டர் கேஜாக அமைக்கப்பட்டது. இந்த ரயில்நிலையம் வழியாக சேலம்-பெங்களூரு மார்க்கமாக, தினசரி 20-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக … Read more

13 தண்டனைகள், 4 இடமாறுதல்கள் பெற்ற காவலரை போக்குவரத்து பிரிவுக்கு மாற்ற உத்தரவு

13 தண்டனைகள், 4 இடமாறுதல்கள் பெற்ற காவலரை தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றாமல் மதுரையில் போக்குவரத்து காவல் பிரிவுக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்தவர் ஆர்.ஸ்ரீமுருகன். இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல் துறையில் 2003-ல் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்தேன். 2011-ல் விபத்தில் காயமடைந்தேன். இதனால் மருத்துவ விடுப்பில் சென்றேன். பின்னர் தொடர்ந்து தலைவலி இருந்ததால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் எனக்கு … Read more

லீவுல மட்டுமில்ல… மழையிலும் சென்னை ரொம்ப பாவம்- கதறவிடும் MTC!

தலைநகர் சென்னை என்றாலே பலரையும் வாழ வைத்த ஊர். தொழில் வளர்ச்சியிலும் சரி, சுற்றுலா, பொழுதுபோக்கு அம்சங்களிலும் சரி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக திகழ்ந்து வருவது தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இதனாலேயே இங்கு இடம்பெயறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தவரை ஒருபோதும் மன நிறைவை தந்ததில்லை. நல்ல மழை பெய்து விட்டால் நகர் முழுவதும் தத்தளிக்க ஆரம்பித்து விடுகிறது. அதையும் தாண்டி வேலைக்கு செல்வோரின் நிலை … Read more