Tamil news Today live: தமிழகம் – புதுச்சேரியில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Tamil news Today live: தமிழகம் – புதுச்சேரியில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் Source link

வரும் 10-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு..!

தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 10-ம் தேதி திறக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, 1 முதல் 5-ம் வகுப்பு வரை அக்டோபர்13-ம் தேதி வரையிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அக்டோபர் 10-ம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டத்திற்கான பயிற்சி இருப்பதால், அக்டோபர் 3-ம் … Read more

திமுகவும், திராவிட மாடல் ஆட்சியும் ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: ” தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ … Read more

விஜயதசமி: பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு!

நவராத்திரியின் 10ஆவது நாளான விஜயதசமி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கினால் நல்ல அறிவுடன் கல்வி ரீதியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதன் அடிப்படையில் சரஸ்வதி பூஜை அடுத்த நாளான விஜயதசமியான இன்று பல கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் சென்று சிறப்பு பூஜைகள் செய்து குழந்தைகளின் … Read more

கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம்- தமிழக அரசுக்கு சுற்றுலா துறை அமைச்சகம் அனுப்பிய கடிதம்

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து, தமிழக அரசிற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி தமிழக பொதுப்பணித்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையைத் தயாரிக்கத் தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய … Read more

சென்னையில் இறுதிக் கட்டத்தில் மழை நீர் வடிகால் பணி: வரும் நாட்களில் முதல்வர், தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு 

சென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை வரும் நாட்களில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்ய உள்ளனர். சென்னையில் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களை தூர்வாருதல், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரும், மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கால்வாய், மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு உள்ளதாக … Read more

திமுக யாருக்கு எதிரான கட்சி தெரியுமா? தெளிவுபடுத்திய ஸ்டாலின்

ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி என்று ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (5.10.2022) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், வள்ளலார் – 200 இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு … Read more

'கர்ப்பிணிகள் பாதிக்கப்படலாம்'-5ஜி செல்போன் டவர் அமைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள்எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் அதிக அலைகாற்றுடன் 5ஜி … Read more

சோலார் பேனல் மூலம் கீரை கிடைக்கும்.. சவுதி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

சோலார் பேனல்கள் மூலம் கீரை வளர்க்கும் தொழில்நுட்பத்தை சவுதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், பாலைவனத்திலும் தாவரங்களை வளர்க்க முடியும். மேலும், குறைந்த செலவில் எதிர்காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை பாதிப்பை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின்படி, வழக்கமான சோலார் பேனல்களுக்கு பதிலாக ‘ஹைட்ரோஜெல்’ பூசப்பட்ட சோலார்பேனல்கள் ஒரு பெரிய உலோக பெட்டியின் மேல் பொருத்தப்படுகின்றன. ஹைட்ரோஜெல் என்பது ஒரு பாலிமர் வேதிப்பொருள். இது, இயற்கையாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாற்றி … Read more

கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த ஆண்டு ஆக. 24 அறிவித்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், … Read more