ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 லட்சம் பனை விதைகள் 5 மணி நேரத்தில் நட்டு உலக சாதனை: 80 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு

வாலாஜா: தமிழக முதல்வரின்  காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடுவதற்காக, விதைகளை சேகரிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது. தொடர்ந்து, நேற்று மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடும் உலக சாதனை நிகழ்வு நடந்தது.அதன்படி, வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் நடந்த பனை விதை நடும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். … Read more

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்கான மலர் அலங்காரம்: வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்தபோதிலும், முதல் மற்றும் 2ம் சீசனின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இரண்டாவது சீசன் துவங்கி நடந்து வரும் நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான சுமார்‌ 4 லட்சம்‌ மலர்செடிகளைக் கொண்டு மலர் பாத்திகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த மலர் செடிகளில் மலர்கள் பூத்து கண்ணிற்கு விருந்தாக காட்சியளிக்கிறது. இவை 10 ஆயிரம் மலர்  தொட்டிகள் மாடங்களில் அடுக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம்‌ … Read more

கரூர் || மனைவியிடையே ஏற்பட்ட தகராறு.! கணவரின் விபரீத முடிவு.!

கரூர் மாவட்டத்தில் மனைவிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கரூர் மாவட்டம் ராயனூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மணிவேல்(40). இவரது மனைவி விஜயலட்சுமி(37). இந்நிலையில் மணிவேலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் ஆடிக்கடி கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த மணிவேல் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து மணிவேலை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை … Read more

'நீ காணாமல் போய்டுவ'… ஆர்எஸ்எஸ்- ஐ சீண்டிய சீமான் – எச் ராஜா எச்சரிக்கை..!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், சாதியும், மதமும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இரண்டு கண்கள் மாதிரி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கோட்பாடே இந்த இரண்டுதான். வெளிப்பாடுதான் இது. தேசிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமாக பள்ளி மாணவர்களிடம் தலைவர்களின் சாதி குறித்து கேள்வி கேட்கப்படுவது கண்டனத்துக்குரியது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என சீமான் ஆவேசமாக கூறினார். இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை வேறொரு தேதியில் நடத்த … Read more

தூத்துக்குடிக்கு மாற்றியதை எதிர்த்து ரைட்டர் வழக்கு கர்மாவின் கொள்கைப்படி நிவாரணம் வழங்குவதாக ஐகோர்ட் நீதிபதி கருத்து: மதுரையில் போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய உத்தரவு

மதுரை: தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து ரைட்டர் தொடர்ந்த வழக்கில், கர்மாவின் கொள்கைப்படி நிவாரணம் வழங்குவதாக கூறியுள்ள நீதிபதி, மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவலராக மாற்ற உத்தரவிட்டுள்ளார். மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிய ஸ்ரீமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இரண்டாம் நிலை காவலராக 2003ல் சேர்ந்தேன். 2011ல் ஏற்பட்ட விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து தலைசுற்றல் மற்றும் ஒற்றைத் தலைவலி அதிகமாக இருந்ததால், … Read more

நாட்டிலேயே இது முதன்முறை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பெருமிதம்!

இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த சோகையை போக்க இரும்பு பெண்மணி திட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு, இரும்பு பெண்மணி திட்டம் மற்றும் பிரதமர் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை … Read more

பூண்டி மாதா கோயிலுக்கு சுற்றுலா சென்றவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி: இறந்தவர்களில் 3 பேர் அண்ணன், தம்பிகள்

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அண்ணன், தம்பிகள் மூவர் உட்பட 6 பேர் பலியாகினர். இதில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. 2 பேர் உடலை தேடும் பணி தொடர்கிறது. தூத்துக்குடியில் இருந்து ஒரு பஸ்சில் பெண்கள் 24 பேர், ஆண்கள் 18 பேர், குழந்தைகள் 15 பேர் என மொத்தம் 57 பேர் நேற்றுமுன்தினம் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து … Read more

தமிழ்நாட்டு பெண்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் விடுத்த வேண்டுகோள்… திமுக அரசு ஷாக்!

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் ”ஓசியில தான போறீங்க” என்று பெண் பயணிகளை குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் இன்றளவும் இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு இபிஎஸ், அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சர்ச்சையின் உச்சமாக கோவை, மதுக்கரையைச் சேர்ந்த துளசி அம்மாள் என்ற மூதாட்டி. சில தினங்களுக்கு முன் அரசு மாநகரப் … Read more

வடலூரில் பரபரப்பு; பாஜக நிர்வாகியின் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ரூ.5.5 லட்சம் பொருட்கள் சாம்பல்: மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? போலீசார் விசாரணை

வடலூர்: வடலூரில் உள்ள பாஜக நிர்வாகிக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் யாராவது தீவைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கடலூர் மாவட்டம் வடலூர் நெய்சர் பட்டுசாமி தெரு தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜா (29). இவர் பாரதிய ஜனதா கட்சியின் வடலூர் நகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். வடலூர் சிட்கோ தொழிற்பேட்டையில்  பிளாஸ்டிக் மறுசுழற்சி … Read more