மின்கட்டண உயர்வை திசை திருப்பவே திமுகவினர் மதத்தை கையில் எடுக்கின்றனர்: தமிழக பாஜக

விழுப்புரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: திமுக ஆட்சிக்கு வந்தால், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது முதல்வர் ஸ்டா லின் குறிப்பிட்டார். இதுவரை இதனை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். பேருந்து கட்டணத்தையும் உயர்த்த போகிறார்கள். இவற்றையெல்லாம் திசை திருப்பவே மதத்தை கையில் எடுத்திருக் கிறார்கள். விழுப்புரத்தில் ஏ.கோவிந்த சாமிக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவில் … Read more

கலெக்டர் ஆய்வின்போது அம்பலம், கணிதத்தேர்வு விடைகளை போர்டில் எழுதிய ஆசிரியர்; விளக்கம் கேட்டு சிஇஓ உத்தரவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளியில் மாவட்ட கலெக்டர் சாந்தி கடந்த 28ம் தேதி ஆய்வுக்கு சென்றார். அப்போது மல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்து வந்தது. அன்றைய தினம் கணித தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு நன்றாக எழுதினீர்களா என கலெக்டர் சாந்தி கேட்டார். நன்றாக எழுதினோம் என கூறிய மாணவர்களிடம் இருந்து வினாத்தாளை வாங்கி கலெக்டர் சாந்தி பார்த்தார். அப்போது அதில் இருந்த கேள்விகளுக்கான பதிலை கலெக்டர் … Read more

இனி ஒதுக்கி வைக்காதீங்க… LGBTQ விழிப்புணர்வு ஊர்வலத்தில் கிருத்திகா உதயநிதி

இனி ஒதுக்கி வைக்காதீங்க… LGBTQ விழிப்புணர்வு ஊர்வலத்தில் கிருத்திகா உதயநிதி Source link

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவை வேரூன்ற விடக்கூடாது: மாதர் சங்க பொதுச் செயலாளர்

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவை வேரூன்ற விடக்கூடாது. அவர்களை தோற்கடிக்க வேண்டும் என மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே தெரிவித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு கடலூரில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில தலைவர் எஸ்.வாலண் டினா தலைமை தாங்கினார். மாநிலதுணைத் தலைவர் என்.அமிர்தம் கொடியேற்றினார். மாநில செய லாளர் பிரமிளா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். இதில், அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே பேசியது: கரோனா … Read more

டிடிவி.தினகரன் கடும் தாக்கு வீட்டுக்கு போலீஸ் வந்தாலே இபிஎஸ் பயந்து விடுவார்

தஞ்சாவூர்: வீட்டுக்கு போலீஸ் வந்தாலே இபிஎஸ்  பயந்து விடுவார், அவர் ஒரு தொடை நடுங்கி என்று தஞ்சாவூரில் டிடிவி. தினகரன் கூறினார். தஞ்சாவூரில்   மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு  அவர்களது படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வம்  கருத்தும் எனது கருத்தும் ஒன்றாக தான் உள்ளது. நான், சசிகலா,  ஓ.பன்னீர்செல்வம் நேரம் வரும் போது ஒன்றிணைவதில் தவறு இல்லையே? ஏன்  எடப்பாடி … Read more

கடன் செயலிகள் உஷார் – பணத்தை வசூலிக்க மோசமான முறையை கையாள்கின்றனர்: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி நாரா சைதன்யா விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது: கடன் செயலிகள் குறைந்த வருமானம் கொண்டவர்களைத் தான் குறி வைக்கின்றன. கடன் செயலிகள் ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அவசரத்துக்கு கடன் தருகின்றன. இந்த செயலிகள் மூலம் கடன் பெறுவது எளிதாக இருந்தாலும், அந்தப் பணத்தை திரும்ப வசூலிக்க கடன் … Read more

செஞ்சியில் நண்பர்கள் நூதன வாழ்த்து; ஆட்டோ டிரைவர் பிறந்தநாளில் மாட்டு சாணத்தால் அபிஷேகம் வீடியோ வைரல்

செஞ்சி: செஞ்சியில் ஆட்டோ டிரைவர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மீது மாட்டு சாணத்தை ஊற்றி நீண்டநாள் வாழ நணபர்கள் அபிஷேகம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (22). ஆட்டோ டிரைவர். இவருக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி  நோய் நொடி தாக்காமல் ஆராக்கியமாக இருப்பதற்காக தண்டபாணி மீது அவரது நணபர்கள் மாட்டு சாணத்தை  கரைத்து ஊற்றி அபிஷேகம் செய்து  நூதனமுறையில் பிறந்தநாளை கொண்டாடினர். இதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டனர். அது … Read more

சிறுத்தை இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது; ஓபிஎஸ் மகன் மீது குற்றச்சாட்டு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் வரட்டாறு வனப்பகுதி அருகே தோட்டத்து வேலியில் கடந்த 27-ம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கியது. வனத்துறையினர் காப்பாற்ற முயன்றபோது உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இதில் தப்பிச் சென்ற சிறுத்தை, மறுநாள் அருகில் உள்ள இன்னொரு வேலியில் சிக்கி இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சிறுத்தை இறந்து கிடந்த நிலத்தில் பூதிப்புரத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன்(35) என்பவர் வேலி அமைத்து ஆடு வளர்த்துள்ளார். ஏற்கெனவே 2 … Read more

பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண இடுக்கியை யூனியன்; பிரதேசமாக்க தேனி மாவட்ட கிராமசபை தீர்மானம்

போடி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை யூனியன் பிரதேசமாக மாற்றக்கோரி போடியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி மாவட்டம், போடி ஊராட்சி ஒன்றிய 15 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த கிராம சபை கூட்டங்கள் போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, ஞானத்திருப்பதி ஆகியோர் கலந்துகொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் படி, இடுக்கி மாவட்டம் ஏற்கனவே … Read more

நடிகர் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில், அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் விழாஅரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அடையாறு தேஷ்முக் சாலையில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் நடந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரை, சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் … Read more