சசிகலா கையால் தங்க கவசம்; ஓபிஎஸ் ப்ளான்; எடப்பாடி ஷாக்!

முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவருக்கு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு 14 கிலோ தங்க கவசத்தை பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்தோர் மக்களிடையே நீங்கா இடம் பிடித்தார். இதன் பின்னர், அடுத்தடுத்த தேவர் ஜெயந்தி மற்றும் … Read more

ஓசூர் வனக்கோட்டத்தில் மலைகிராம மக்கள், விவசாயிகள் புதரில் வீசிய 111 கள்ளத்துப்பாக்கிகள்: மீட்ட வனத்துறையினர் போலீசிடம் ஒப்படைத்தனர்

ஒசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் தாமாக முன்வந்து ஒப்படைக்கப்பட்ட 111 கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், நேற்று ஓசூர் ஏடிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளை, கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளவர்கள் வேட்டையாடி வருவதை தடுக்கும் பொருட்டு, கள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்கள், வனத்துறை அலுவலர்களிடமோ, ஊர் முக்கியஸ்தர்களிடமோ, கடந்த 9ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் கார்த்திகேயனி வேண்டுகோள் விடுத்திருந்தார். … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிக்காதது ஏன்? – சி.வி.சண்முகம் விளக்கம் 

புதுடெல்லி: ” உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொதுச் செயலாளர் பதவிக்கான முன்னேற்பாட்டு பணிகளையோ, அதுதொடர்பான அறிவிப்பையோ இதுவரை செய்யவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” ஓபிஎஸ் தரப்பில், பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது எங்களது தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு … Read more

ட்விட்டர் ஸ்பேசஸில் ஸ்டாலின் உரை… திமுக உடன்பிறப்புகளுக்கு செம அட்வைஸ்!

திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் செப்டம்பர் மாதம் டதிராவிட மாதம்’ என்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கடந்த ஒரு மாதமாக தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேசஸில் பல்வேறு தலைவர்கள் உரையாற்றி வந்தனர். திராவிட மாதக் கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று (செப்டம்பர் 30) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாற்றுகிறார். ‘திராவிட அரசு’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் சாரம்சம்: திராவிட இயக்க கொள்கைகள், சித்தாந்தங்களை ஒரு காலத்தில் எழுத்து, மேடை பேச்சு, திரைப்படங்கள் … Read more

வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: 7 மாணவர்கள் முதலிடம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக  தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நேற்று வெளியிட்டார். இதில், சேலம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளமறிவியல் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. … Read more

உரிமம் இல்லாத 111 நாட்டு துப்பாக்கிகள் தாமாக ஒப்படைத்த மலைகிராம மக்கள்: வன அலுவலர் தகவல்

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களில் வசிக்கும் மலை கிராமமக்கள் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ள 111 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளும் ஓசூர் ஏஎஸ்பியிடம் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை கிராமமக்கள் தாமாக முன் வந்து ஒப்படைக்க வலியுறுத்தி மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஓசூர் வனக்கோட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை … Read more

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி… தேதி குறிச்ச உயர் நீதிமன்றம்- தமிழக போலீசாருக்கு செக்!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் நாடியது. அப்போது நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் பி.எஃப்.ஐ அமைப்பு மீதான ரெய்டு நடவடிக்கைகள், கைது, வழக்குப்பதிவு சம்பவங்கள் நடந்தன. உடனே ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை குறிவைத்து பல்வேறு இடங்களில் பெட்ரோல் … Read more

பூட்டி கிடக்கும் பொது கழிவறை: பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

சின்னாளபட்டி: பாளையன்கோட்டையில் உள்ள பெண்கள் பொது கழிவறை பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதிமக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாளையன்கோட்டை ஊராட்சியில் பாளையன்கோட்டை, கூலாம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி, லட்சுமிபுரம், பின்னிராயபுரம், கந்தசாமிபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் பாளையன்கோட்டையில் உள்ள மயான சாலையில் பெண்கள் பொது கழிவறை உள்ளது. இந்த கழிவறை பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பெண்கள் திறந்த வெளியை … Read more

”எங்களுக்கு அடிப்படை வசதியே இல்லை”.. குடியிருப்பு போராட்டத்தில் இறங்கிய மலைவாழ் மக்கள்!

கெடுபிடி காட்டும் வனத்துறையினரை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியிலுள்ள பட்டுபூச்சி ஜெயந்தி நகர் பகுதி மக்கள் மலைப்பகுதியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான பட்டுபூச்சி ஜெயந்தி நகர் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் 15 வகையான பொருட்களை எடுத்து விற்பனை செய்ய அரசு இவர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!!

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்து, ஆபாசமாக பேசி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் ராஜமுத்தெழில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியின் முன்பு திரண்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே … Read more