ஈரோடு: விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி தொழிலாளி உயிரிழப்பு.!

ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சம்பத்நகர் அடுத்துள்ள கொத்துக்காரர் வீதியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்கள் இயங்கி வரும் விசைத்தறி கூடத்தில் 24 தறிகள் உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம்போல நீலமேகம், மாற்றுத்திறனாளிகளான செந்தில் மற்றும் விஜி ஆகிய மூவர் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது மின் கசிவு ஏற்பட்ட‌ காரணத்தால், … Read more

உணவக சோதனைகளுக்கு ஊடகங்களை அழைத்துச் செல்ல தடை!!

உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது விதிகளை பின்பற்றாமல் ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தங்கள் உணவகங்களின் பெயர் கெடுகிறது என்றும், எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவக சோதனையின் போது … Read more

தருமபுரி | ‘‘கலெக்டரம்மா என் வண்டியில் ஏறுங்கள்’’ – குறைதீர் கூட்டத்தில் விவசாயியின் வெள்ளந்தி பேச்சு

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30-ம் தேதி) விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பலரும் அடுத்தடுத்து தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில், மொரப்பூர் ஒன்றியம் எலவடை கிராமத்தைச் சேர்ந்த முதியவரான விவசாயி சின்னசாமி என்பவர் எழுந்து நின்று, ‘எங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் டிஏபி உரம் கேட்டு சென்றேன். … Read more

எச்.ராஜா திடீர் கண்டிஷன்; முதல்வர் ஸ்டாலின் டென்ஷன்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் பல்வேறு கொலைகள் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால் தான் மத்திய அரசு தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றம். கடந்த 1991ல் அரசு தகவல்களை விடுதலை புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால் தான் திமுக அரசு கலைக்கப்பட்டது. PFI இயக்கத்திற்கு ஆதரவாக பேசி வரும் … Read more

திருவிடைமருதூர் அருகே இடிந்து விழுந்த தாங்கு பாலம்;1 கோடியில் சீரமைப்பு பணி: 5ம் தேதி முதல் குடிநீர் சப்ளை தொடங்க வாய்ப்பு

திருவிடைமருதூர்; திருவிடைமருதூர் அருகே வாண்டையார்இருப்பு கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் தாங்கு பாலத்தின் 6 கண்மாய்கள் இடிந்து விழுந்த இடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்யப்படுகிறது.திருவிடைமருதூர் தாலுகாவில் வாண்டையார் இருப்பு, அம்மையப்பன் ஆகிய 2 இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டு நாகை, வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வாண்டையார் இருப்பில் இருந்து தினமும் 125 லட்சம் லிட்டரும், அம்மையப்பனில் இருந்து 80 லட்சம் லிட்டரும் … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவங்கள் தொடர்பாக நீலகிரி மாவட்டம் ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் இரு வழக்குகளும், சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் … Read more

நவ.6-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தவும், அந்த ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதியளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம்காட்டி, தமிழக அரசு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து … Read more

என்ன இவரும் இப்படி சொல்றாரு.?.. அப்போ நிஜமாவே அப்படி நடந்திடுமா!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: திமுகவைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் எப்பொழுதுமே அவர்கள் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து ஏமாற்றி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு அம்மா வழியில் ஆட்சியை கொடுத்திருந்தார்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய திருவிளையாடல் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது . தலைவர் (எம்ஜிஆர்) கட்சி ஆரம்பித்ததற்கு பின், 1989 … Read more

கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன் வலம் வரும் தாய் யானை: ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

மேட்டுப்பாளையம்: கேரள மாநிலம் சாலக்குடி அதிரப்பள்ளி வனப்பகுதியில் தாயுடன் இரண்டு குட்டி யானைகள் நடமாடும் காட்சி யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வனத்துறையினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரே உயரத்தில், ஒன்று போல் காட்சியளிக்கும் இரு குட்டியானைகளும் தாயுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு குட்டி யானைக்கு மட்டும் தந்தம் சற்று நீளமாக உள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் இதே வனப்பகுதியில் தாய் யானையுடன் இந்த இரு குட்டியானைகளையும்  வனத்துறையினர் பார்த்துள்ளனர். ஆறு … Read more

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வைரக்கல் திருட்டு? – விவசாயி குற்றச்சாட்டு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வைரக்கல் திருடப்படுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத் தீர்வுக் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் திருநெல்வேலி நயினார் குளம், பாளையங்கால்வாய் பகுதிகள் தூர்வாரும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும், வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து தங்கும் கங்கை கொண்டான் குளத்தில் இருக்கும் … Read more