சென்னையில் சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள் – 2% அபராத தளர்வு சலுகை யாருக்கு? 

சென்னை: சென்னையில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2 சதவீத தனி வட்டி விதிக்கும் நடைமுறையில் ஒருமுறை மட்டும் தளர்வு அளித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து சென்னையில் குடிநீர் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையில் புதிய சொத்து வரியை … Read more

பாலியல் புகார் தெரிவித்த ஊட்டி அரசு கல்லூரி உதவி பேராசிரியை இட மாற்றம்: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

ஊட்டி:  ஊட்டி அரசு கலை கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றுபவர் பிரவீணாதேவி. நேற்று முன்தினம் இவரை  திருப்பூர் மாவட்டம் காங்கயம் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வந்துள்ளது. இது தொடர்பாக பிரவீணாதேவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘கடந்த பிப்ரவரி மாதம் உதவி பேராசிரியர் தர்மலிங்கம் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர், எஸ்பி, கல்லூரி கல்வி இயக்குநரகம், மண்டல இயக்குநர், கல்லூரி கல்வி … Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தடை விதித்தது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன் ஆவேசம்

கோவை: உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான திமுக அரசின் நடவடிக்கை கடும் … Read more

சானிட்டரி நாப்கின் விவகாரம்: தமிழ்நாடு அதிலும் முன்னோடிதான்!

“ஆணுறைகளையும் கூட அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள் போல?” இது சாமானியர் ஒருவர் பேசியது கிடையாது. ஐஏஎஸ் படித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் பெண் இயக்குநர் ஒருவர் கூறியது. அதுவும், பள்ளி மாணவி ஒருவர் குறைந்த விலை நாப்கின்கள் பற்றிய கேள்விக்குதன் அவர் இப்படி பதிலளித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ‘அதிகாரம் பெற்ற மகள்கள்; வளமான பீகார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும், ஐஏஎஸ் … Read more

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மனைவி, மாமனாருக்கு ஆயுள் தண்டனை: மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் போலீஸ் சரகத்துக்குட்பட்ட அப்புராஜபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைமதி (30). இவரும், சதீஷ்குமார் (30) என்பவரும் காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கலைமதி தந்தை நாகராஜன் (60) வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் … Read more

சீன அதிபர் வருகையின்போது சென்னையில் போராட்டம் நடத்திய திபெத்திய மாணவர்களுக்கு எதிரான வழக்கு ரத்து

சென்னை: சீன அதிபர், ஜி ஜின் பிங் சென்னை வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திபெத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். சென்னையில் படித்து கொண்டிருந்த திபெத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more

'நா ஓசில வர மாட்ட'.. பாட்டியின் புரட்சி தேர்தலில் எதிரொலிக்குமா?

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்கள் இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி திருநங்கைகளும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை குறித்து பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசியில் தானே பேருந்தில் போறீங்க என்றும் மற்ற இலவச திட்டத்தையும் குறித்து ஏளனமாக பேசினார். இது பயனாளிகளுக்கு மட்டுமல்லாமல் வெகுஜன மக்களை வேதனையடை செய்தது. இலவசம் என்பதை பெருமையாக வழங்கி வரும் அரசு தனது பயனாளிகளை பார்த்து ஓசி தானே என … Read more

வெம்பக்கோட்டை அகழாய்வில் டெரகோட்டா மனித முகம் பறவை தலை கண்டெடுப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, தொல்லியல் மேட்டில் ஏற்கனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாலான பறவை தலை, மனித முகம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘இங்கு கிடைத்த பழங்கால பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறையின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவில் வெம்பக்கோட்டை பகுதியில், எந்த நூற்றாண்டை சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது … Read more

திருசெந்தூர் கோவில் அருகே ஆக்கிரமிப்பை மீட்ககோரிய வழக்கு- கோவில் உதவி ஆணையர் ஆஜராக உத்தரவு

திருசெந்தூர் கோவில் அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்தை மீட்டு ஒப்படைக்க கோரிய வழக்கில், உரிய ஆவணங்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த மார்கண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடு. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான இடம் திருசெந்தூர் … Read more

மதுரை அதிமுக பொதுக்கூட்டம் | சிரிப்பு உரை எனச் சொன்ன ஆர்.பி.உதயகுமார் – கோபித்துக் கொண்ட செல்லூர் ராஜூ

மதுரை: ‘‘திமுக ஆட்சியை அகற்ற மதுரையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது’’ என்று அதிமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ‘‘கொங்கு மண்டலத்தில் பறந்த கே.பழனிசாமி கொடி, தற்போது தென்மண்டலத்தில் பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழர்களின் ஒரே நம்பிக்கையாக இபிஎஸ் உள்ளார். மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிற திமுக ஆட்சியை அகற்ற மதுரையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. அதற்கு கே.பழனிசாமி தலைமையில் அணி திரள்வோம்’’ … Read more