திருப்பூர் | மாணவிகளை தவறுதலாக வழிநடத்தியதாக புகார்: அரசுப் பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவிகளை தவறுதலாக வழிநடத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப்பாட முதுகலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சாந்திப்பிரியா. இவர் மீது மாணவிகள் பல்வேறு புகார்கள் அளித்ததைத் தொடர்ந்து, அவரை வேறு பள்ளிக்கு மாற்றி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவி ஒருவரிடம் … Read more

பிளாட்ஃபார்ம் டிக்கெட்… கொஞ்ச நாளைக்கு ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போயிடாதீங்க மக்களே!

ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் தற்போது 10 ரூபாயாக உளளது. இந்த கட்டணம் 20 ஆக உயர்த்தப்படுவதாகவும், அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 2023 ஜனவரி 31 ஆம் தேதி வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு,ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி ஆகிய எட்டு ரயில் நிலையங்களில் இந்த கட்டண உயர்வு குறிப்பிட்ட நாட்களுக்கு அமலி்ல் … Read more

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளில் தலையிட ஆளுநர்களுக்கு ஏன் உரிமை அளிக்க வேண்டும்?: ராகுல் காந்தி கேள்வி

கூடலூர்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளில் தலையிட ஆளுநர்களுக்கு ஏன் உரிமை அளிக்க வேண்டும்?, அவர்கள் என்ன அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு என்ன உரிமை இருக்கிறது என ராகுல் காந்தி பேசினார்.

பாப்ஸ்கோ ஊழியர்கள் உடனான புதுச்சேரி அமைச்சரின் பேச்சுவார்த்தை தோல்வி

புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாப்ஸ்கோ ஏஐடியுசி ஊழியர்களை அழைத்து அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், எழுத்துபூர்வ உத்தரவாதம் கேட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. புதுச்சேரியில் 60 மாத நிலுவை ஊதியம், பண்டிகை கால பணிக்கான கமிஷன் தொகை வசூல், ஓய்வு கால பண பலன்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பாப்ஸ்கோ ஏஐடியுசி ஊழியர்கள் ஜென்மராக்கினி மாதா கோயில் எதிரே பல கட்ட போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் … Read more

முள்ளை முள்ளால் எடுத்த ஓபிஎஸ்; எடப்பாடி பழனிச்சாமி செம ஷாக்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இலைமறை காயாக இருந்து வந்த கோஷ்டி பூசல் ஆட்சியை இழந்த பின்னர் விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளது. இதனால் அதிமுகவில் தலைமை பதவி யாருக்கு? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இடையே போட்டி, மோதல் போக்கும் நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை … Read more

சனாதன சக்திகளை சுட்டெரிக்கும் இரட்டை சூழல் துப்பாக்கியாக திமுகவும் மதிமுகவும் சேர்ந்து செயலாற்றும்: துரை வைகோ

பெரம்பலூரில்: சனாதன சக்திகளை சுட்டெரிக்கும் இரட்டை சூழல் துப்பாக்கியாக திமுகவும் மதிமுகவும் சேர்ந்து செயலாற்றும் என்று தெரிவித்துள்ளார். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

`ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அளித்த அனுமதியை மறுஆய்வு செய்க’- காவல்துறை மனுதாக்கல்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் அந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளிக்கும்படி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 8-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் … Read more

“பாஜக ஆட்சியில் மாநில அரசுகளின் உரிமை பறிப்பு” – கூடலூரில் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு

கூடலூர்: “பாஜக மக்களிடையே பல்வேறு பாகுபாடுகளை புகுத்தி வருகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், 21வது நாளில் இன்று மீண்டும் தமிழகத்தில் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார். கேரள மாநில எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் கூடலூரில் பாதயாத்திரையை மாலையில் தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் … Read more

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அட்டவணை இதோ – தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு..!

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு அருகே உள்ள எஸ்வந்த்பூர் – திருநெல்வேலி மற்றும் மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் … Read more