கடைவரம்பில் கருகிய நெற்பயிர்களை காப்பாற்ற அறுவடை வரை தண்ணீர் விட குமரி விவசாயிகள் கோரிக்கை: வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

நாகர்கோவில்: தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் தண்ணீர் இல்லாததால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு உள்ளனர். அவர்களிடம் அறுவடை முடியும் வரை தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. மேலும் இருபருவமழையும் கைகொடுப்பதால், மாவட்டத்தில் உள்ள குளங்களில் தண்ணீரை சேமித்து வைத்தும், விவசாயத்திற்கு … Read more

”இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்”-ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு..சீமான் வரவேற்பு

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் 50 இடங்களில்  ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிடப்பட்டிருந்ததற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ‘’மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், … Read more

கறவை மாடு வாங்க கடனுதவி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

திருப்பூர் மாவட்டத்தில் கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன்உதவி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், தாட்கோ மூலமாக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடு வாங்க ரூ.1½ லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் மானியத்தொகையும், மீதம் உள்ள தொகை வங்கிக் கடனாகவும் வழங்கப்பட உள்ளது. தியான ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருந்தால் http://fast.tahdco.com என்ற … Read more

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’-ஐ சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை இந்தியாவில் பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல், உள்ளிட்ட 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2405 இணையதளங்களில் வெளியிட தடை … Read more

தமிழ்நாடு அரசு கலைப்பு?; பாஜக பகீர் ஆலோசனை!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் அனுமதி வழங்குமாறு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படாமல் இருந்ததால், அந்த அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த மனுவை … Read more

தருமபுரம் ஆதீனத்தின் சொத்தை மீட்ககோரி வழக்கு: திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ஆஜராக ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: திருச்செந்தூர் கோயில் அருகே ஆக்கிரமித்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்தை மீட்க நடவடிக்கை கோரிய வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்தை ஆக்கிரமித்து கொண்டு வெளியேற மறுக்கின்றனர் என்று மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெற்றோரால் கட்டாய திருமணம் – கணவனை விட்டுவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்

பெற்றோரால் கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்ட இளம்பெண் கணவனை விட்டுவிட்டு காதலனை திருமணம் செய்துகொண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி(18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து(22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் 18 வயதான ஜான்சிராணிக்கு கடந்த ஆண்டு அவரது உறவினரான கிளிண்டன் என்பவரை பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த … Read more

டாடா பஞ்ச் கேமோ எடிஷன் அறிமுகம்.. இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா..?

பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச் மாடல் காரில் கேமோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அடர் பச்சை நிறத்தில் இது வந்துள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.6.85 லட்சம். இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.8.63 லட்சம். காஸிரங்கா எடிஷனைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பு எடிஷனாக கேமோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட தாக வந்துள்ளது. 86 ஹெச்.பி. திறன் … Read more

‘அம்மா உணவகத்தில் திமுக மகளிர் அணியினருக்கு பணி’ – கவுன்சிலர் கோரிக்கைக்கு மேயர் பிரியா அளித்த பதில்

சென்னை: அம்மா உணவகத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர் ராணி ரவிச்சந்திரன் கோரிக்கை வைத்தார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (செப்.29 ) நடைபெற்றது. இதில் நேரமில்லா நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நேரமில்ல நேரத்தில் பேசிய 98-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி, வார்டு 4-இல் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் 10 சிப்பங்கள் ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதால் பணி … Read more

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை: விசிகவுக்கு கிடைத்த வெற்றி – திருமா ஓப்பன் டாக்!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதனையேற்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு உயர் … Read more