கொட்டாம்பட்டி பகுதியில் இடிந்து விழுந்த தொகுப்பு வீடுகள்

மேலூர்: கொட்டாம்பட்டி பகுதியில் பெய்த சிறு மழைக்கு தாங்காத தொகுப்பு வீடு இடிந்து விழ, 4 வீடுகள் கடும் சேதமாகின. கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சியில் உள்ளது அலங்கம்பட்டி. இங்கு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஆதி திராவிடர் காலனி தொகுப்பு வீடுகள் மிகவும் சேதமாக, ஒழுகி கொண்டிருந்தது. இதுகுறித்து பல முறை கடந்த ஆட்சியின் போது, புகார் கூறியும் மராமத்து பணிகள் நடைபெறவில்லை. இங்கு குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டி தரப்படும் என அப்போது உறுதி அளிக்கப்பட்டதும், … Read more

டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி கொலை!!

செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமலைநகர் அடுத்துள்ள தைலாவரம் பகுதியை சேர்ந்த சந்துரு (28) என்பவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் புறநகர் பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு இவர் கொலை மற்றும் கொள்ளை ஆகிய சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் … Read more

முதுநிலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வன்னியர் உள்ஒதுக்கீடு இல்லை: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

மதுரை: ‘முதுநிலை ஆசிரியர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் வன்னியர் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை’ என உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சீர்மரபினர் சங்கத் தலைவர் ஜெபமணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 28-ல் முதுநிலை ஆசிரியர் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்), சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு 3 … Read more

கோபமாக வெளியேறிய திமுக அமைச்சர்… அரசு நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் பன்றிக் காய்ச்சல், ஸ்வைன் ஃப்ளூ, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன தமிழக முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும் , ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் நோக்கிலும் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் இன்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி … Read more

திரூவாரூர், மயிலாடுதுறை, நாகை தஞ்சையில் இன்று பலத்த மழை 25,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கியது

திருவாரூர்: தென்மேற்கு பருவமழை வரும் 30-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையும் மழை பெய்தது.திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது. திருவாரூர், நன்னிலம் பகுதியில் நள்ளிரவு … Read more

காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்: திடீரென வெளியேறிய அமைச்சர் மா.சு… பின்னணி என்ன?

காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்: திடீரென வெளியேறிய அமைச்சர் மா.சு… பின்னணி என்ன? Source link

மாணவி மரணம் : விசாரணைக்கு ஒத்துழைக்காத பெற்றோர்?

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, … Read more

பயிற்சி வழங்குவதில் தாமதம்: சிறப்பு எஸ்.ஐ.-க்கள் வேதனை

மதுரை: தமிழக காவல் துறையில் அதிகாரி முதல் காவலர்கள் என சுமார் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். போலீஸ் பற்றாக் குறையைத் தொடர்ந்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் புதிதாக 2-ம் நிலை காவலர்கள், எஸ்.ஐ.-க்கள், தேர்வாணையம் மூலம் டிஎஸ்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. கடந்த 1993-ல் சுமார் 10 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பேட்ஜ், பேட்ஜாக 1995 வரை பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் பிற வேலைக்குச் சென்றவர்கள், பிரச்சினையில் சிக்கி … Read more

'திராவிட மாடல்' என்ன தமிழ் வார்த்தையா? -ஸ்டாலினை கலாய்த்த சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமது கலகலப்பான பேட்டிகளின் மூலம் மத்திய, மாநில அரசுகளை அவ்வப்போது விமர்சித்து வருவதுடன், கேள்விகளால் துளைத்தெடுத்தும் வருபவர். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் பொன்முடியின் ஓசி பஸ் விவகாரம், திராவிட மாடல் உள்ளிட்டவை குறித்து திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார். ‘அமைச்சர் பொன்முடி படித்தவர், பண்பாளர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் பெண்களை பார்த்து நீங்கள் பஸ்சில் ஓசியாக தானே பயணிக்கிறீர்கள் … Read more

ஒற்றுமை உணர்வு தான் நம்மை எப்போதும் என்றும் காப்பாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

தென்னிந்திய திருச்சபைகளின் பவள விழா சென்னை வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் அரங்கத்தில் நடைப்பெற்றது இதில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர்  பங்கேற்றனர், 75வது பவள விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மேடையில் கிருத்துவர்களுடன் கேக் வெட்டி பயனாளிகளுக்கு, காது கேட்கும் இயந்திரம், தையல் மிஷின், உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார், இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர்.. … Read more