'போதாத ஊருக்கு வழி செல்லும் அமைச்சர்' – ஆர்.பி.உதயகுமார் பதிலடி!

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கம் வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள வேளாண்துறை அமைச்சரின் பதில் போகாத ஊருக்கு வழி சொல்வது போல் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:- “சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்த விவசாயம் செழிக்க தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு திட்டங்களை செய்தார். காவிரி நீர் மேலாண்மை மற்றும் முறைப்படுத்தும் குழுவை அமைத்திட நாடாளுமன்றத்தை 21 நாட்கள் முடக்கி அதன் மூலம், காவிரி பிரச்சினைக்கு … Read more

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு: தமிழிசை சௌந்தராஜன்

கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகதான் இருக்கின்றது எனவும் இருளில் முழ்கவில்லை என தெரிவித்தார்.4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது எனவும் சிலர் செய்த பிரச்சினையால் மின் தடை ஏற்பட்ட நிலையில் மாற்று நடவடிக்கை எடுத்து … Read more

தர்மபுரி ரயில் நிலையம் மூலம் ஆண்டுக்கு 3.50 லட்சம் டன் சரக்குகள் பரிமாற்றம்; 500 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு

தர்மபுரி: தர்மபுரி ரயில் நிலையத்தில் சரக்கு கையாளும் விதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3.50 லட்சம் டன் சரக்குகள் இங்கு பரிமாற்றம் செய்யப்படுவதால், 500 தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. தர்மபுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம், கடந்த 1906 ஜனவரி 16ம் தேதி ஆங்கிலேயர் காலத்தில், மீட்டர் கேஜாக அமைக்கப்பட்டது. இந்த ரயில்நிலையம் வழியாக சேலம்-பெங்களூரு மார்க்கமாக, தினசரி 20-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக … Read more

13 தண்டனைகள், 4 இடமாறுதல்கள் பெற்ற காவலரை போக்குவரத்து பிரிவுக்கு மாற்ற உத்தரவு

13 தண்டனைகள், 4 இடமாறுதல்கள் பெற்ற காவலரை தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றாமல் மதுரையில் போக்குவரத்து காவல் பிரிவுக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்தவர் ஆர்.ஸ்ரீமுருகன். இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல் துறையில் 2003-ல் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்தேன். 2011-ல் விபத்தில் காயமடைந்தேன். இதனால் மருத்துவ விடுப்பில் சென்றேன். பின்னர் தொடர்ந்து தலைவலி இருந்ததால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் எனக்கு … Read more

லீவுல மட்டுமில்ல… மழையிலும் சென்னை ரொம்ப பாவம்- கதறவிடும் MTC!

தலைநகர் சென்னை என்றாலே பலரையும் வாழ வைத்த ஊர். தொழில் வளர்ச்சியிலும் சரி, சுற்றுலா, பொழுதுபோக்கு அம்சங்களிலும் சரி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக திகழ்ந்து வருவது தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இதனாலேயே இங்கு இடம்பெயறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தவரை ஒருபோதும் மன நிறைவை தந்ததில்லை. நல்ல மழை பெய்து விட்டால் நகர் முழுவதும் தத்தளிக்க ஆரம்பித்து விடுகிறது. அதையும் தாண்டி வேலைக்கு செல்வோரின் நிலை … Read more

நித்தியானந்தா அளிக்கும் கைலாசா விருதுகள்: தர்மரட்சகர் விருது பெறும் திருச்சி சூர்யா சிவா

Kailasa Dharmarakshaka Award: திராவிட நம்பிக்கைக் கொண்ட திமுகவின் பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா…. அதற்கு நன்றி கூறுகிறார் விருது பெறும் சூர்யா. இந்த விஷயத்தை, அவரே தனது டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார். இந்த டிவிட்டர் பதிவு, சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழு வடிவமாக இருக்கிறார். இந்தியாவில் அவர் மீது பல பாலியல் … Read more

பிரியாணி, ஷூ கடைகளுக்கு வருபவர்கள் நிறுத்துகின்றனர்: கார் பார்க்கிங் சென்டராக மாறிய தேசிய நெடுஞ்சாலை

* ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் விபத்து அபாயம் * கடும் நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை ஆம்பூர்: ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரியாணி, ஷூ கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் நிறுத்தி செல்லும் கார்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் தொடர்கதையாகி வருகிறது. எனவே விதிமீறி வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையத்தில் இருந்து ஓஏஆர் சிக்னல் செல்லும் வழியில் போதை … Read more

பசும்பொன் தேவர் சிலைக்கான தங்க கவசத்தை ஓபிஎஸ்சிடம் மட்டுமே வழங்க வேண்டும்: மதுரையில் வங்கி அதிகாரியிடம் ஆதரவாளர்கள் கடிதம்

பசும்பொன் தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை எடுத்து விழாக் குழுவினரிடம் வழங்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்று மதுரையில் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகத்திடம் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் கடிதம் வழங்கினார். பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி ஒரு வாரத்துக்கு முன்பாக அவரது சிலைக்கு அணிவிக்கும் விதமாக அதிமுக வழங்கிய தங்கக்கவசம் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா கிளையில் உள்ள பெட்டகத்தில் … Read more

ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்: அசத்தல் திட்டம் சென்னையில் தொடக்கம்!

குறைந்த எடை கொண்ட சிலிண்டர்களை ரேஷன் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. வீ்ட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் ஏற்கெனவே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகத்திற்கோ, வணிக பயன்பாட்டுக்கோ சிலிண்டர் இணைப்பு பெற வேண்டுமானால் அதற்கு இருப்பிட சான்று அவசியமாகிறது. கல்வி, வேலை மற்றும் தொழில் நிமித்தமாக ஊர் விட்டு ஊர் வந்து சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போரில் … Read more

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டம்: ஒன்றிய இணை அமைச்சர் பகவந்த் குமார் தகவல்

நெல்லை: ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் பகவந்த் குமார் தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவிலேயே அதிக அளவில் மின் உற்பத்தி திறன் கொண்ட கற்றாழை டர்பைன் வள்ளியூர் அருகே அமைத்துள்ளது. இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலை டர்பைனை ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் பகவந்த் குமார் … Read more