விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பிரதாப், சாமுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றின் கரைபகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி, கருப்புநிற ஈமத்தாழி பானை ஓடுகள், 4வகை குறியீடுகளுடன் தாழியின் விளிம்பு பகுதிகள் ஆகியவற்றை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: முதுமக்கள் தாழியைப் பொருத்தவரை 3 விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. ஒன்று இறந்தபின்பு சடலத்தை சம்மணமிட்டு அமரவைத்து சடலத்தின் உருவத்திற்கு … Read more