பிலாஸ்பூர் எய்ம்ஸ் திறப்பு.. மதுரையில் பொட்டல்காடு… சு. வெங்கடேசன் போட்ட ட்வீட்..!

2018 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்ட சத்தீஸ்கர் பிலாஸ்பூர் எய்மஸ் மருத்துவமனையை நாளை (அக்.,5) பிரதமர் திறந்து வைக்கிறார். அதே வருடம் அடிக்கல் நடப்பட்ட மதுரை எய்ம்ஸ் திறக்கப்படவில்லை என்று மதுரை எம்பி. சு.வேங்கடேசன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சுட்டிக்காட்டியுள்ளார். மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக இரண்டு நாட்கள் பயணமாக தமிழம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி நட்டா தெரிவித்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை … Read more

திண்டுக்கல்லில் 6ம் தேதி புத்தக திருவிழா 16ம் தேதி வரை நடக்கிறது: கலெக்டர் விசாகன் தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அக்.6ம் தேதி முதல் அக்.16ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் ட்டலி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா அக்.6 முதல் அக்.16ம் தேதி வரை தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழா நடைபெறும் அக்.6ம் தேதி காலை 7 … Read more

”ஓனரின் சித்ரவதைகளை தாங்க முடியல” – வீட்டு வேலைக்காக துபாய் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால். இவருடைய மனைவி புவனா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சென்னையில் சரியான வேலை இல்லாததால் கடந்த பிப்ரவரி மாதம், துபாயில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண் வேலை செய்வதற்காக சென்னை சூளைமேட்டில் உள்ள வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்டை அணுகியுள்ளார். அப்போது புவனாவிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு மருத்துவ பரிசோதனை முடித்து அந்த ஏஜென்ட் மூலம் துபாய் உள்ள ஒருவர் வீட்டில் பணி பெண்ணாக … Read more

பேருந்தில் பெண்கள் காசு கொடுத்து செல்லலாமா? : அமைச்சர் விளக்கம்!!

சமீபத்தில் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ஓசி என குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் பேச்சிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தான் வழக்கு மொழியில் ஓசியென கூறியதை சிலர் தவறாக புரிந்துக்கொண்டதாக விளக்கமளித்தார். இதனிடையே மூதாட்டி ஒருவர், இலவசமாக பேருந்தில் பயணிக்க மாட்டேன் என்றும் டிக்கெட்டிற்கு பணம் கொடுத்து தான் பயணிப்பேன் என நடத்துநரிடம் அடம் பிடித்த வீடியோ … Read more

மதுபோதையில் நண்பர் கொலை – குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு

சென்னை: மதுபோதையில் நண்பனை தாக்கி கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி மற்றும் விக்கி. இவர்கள் இருவரும், பால் கவர்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மது அருந்தும்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணி தாக்கியதில், அவரது நண்பர் விக்கி உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த … Read more

திருமா…சீமானுக்கு சிக்கல்; பலே ப்ளான் போடும் பாஜக!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிஎஃப்ஐயுடன் தொடர்புடைய கிளை அமைப்புகளுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயலுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாதச் செயலுக்கு ஆட்களை சேர்த்தல் என்பன உள்பட பல்வேறு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேசிய புலனாய்வு அமைப்பு நாடு … Read more

குவியும் தசரா குழுக்களால் திணறும் குலசேகரன்பட்டினம்

உடன்குடி: மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு திருக்கோலங்களில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. 7வது திருநாளன்று காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை 4.30 மணிக்கு மகிஷாசூரன் வீதியுலா, மாலை 4 மற்றும் 5 மணிக்கு சமயசொற்பொழிவு, மாலை 6 மணி பரதநாட்டியம், இரவு … Read more

உயிர் கொடுத்து நாட்டின் கொடி காத்த திருப்பூர் குமரன்! பிறந்த தின சிறப்பு பகிர்வு!

அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர் திருப்பூர் குமரன். திருப்பூர் மண்ணுக்கு பெருமை சேர்த்ததுடன் தமிழர்களையும் தலைநிமிர வைத்த அவரது பிறந்த தினம் இன்று. திருப்பூர் மாவட்டம் சென்னிமலையில், நாச்சிமுத்து -கருப்பாயி தம்பதியின் மகனான குமரன், 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர், குமாரசாமி. நெசவுத் தொழிலில் போதிய வருவாய் இல்லாததால் குமரனின் குடும்பம் திருப்பூருக்கு இடம் பெயர்ந்தது. குடும்ப வறுமையால் பள்ளிப்படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்ட … Read more

முக்கிய அறிவிப்பு! 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள்!!

தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறித்தியுள்ளது. இதுகுறித்து, அனுப்பிய கடிதத்தில், இந்த பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான தேதிகளை (உத்தேசம்) அரசு அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ஆம் தேதி … Read more

கோவையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

கோவை: மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ஆட்சியர் அறிவித்த ரூ.721-ஐ வழங்க வேண்டும். கூலி உயர்வு, பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர், கடந்த 2ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். கோவை மாநகரில் 3,500 தூய்மைப் பணியாளர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 10 … Read more