இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!!

கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் வெறுப்புணர்வும், பிரிவினைவாத வன்முறை செயல்களும், இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையும் அதிகரித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் அமைப்பு தனி காலிஸ்தான் நாடு என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை … Read more

கழிவுநீர், பிளாஸ்டிக், குப்பை கழிவுகளால் பாழாகும் பாலாறு

வேலூர்: வட தமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு, கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி 93 கி.மீ. பயணித்து, ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் வயலூரில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் வறண்ட நதியாக ஆண்டுக்கு ஒருமுறை விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் மட்டுமே பாலாற்றில் வெள்ளத்தைக் காண முடியும் என்ற நிலைமாறி கடந்த ஓராண்டாக பாலாறு வற்றாத ஜீவநதியாக மாறி மக்கள் மனதை குளிர்வித்து வருகிறது. மக்களின் … Read more

'நாள்தோறும் 4 ஷூட்டிங்; விளம்பர ஆட்சி முதல்வர் ஸ்டாலின்' – ராஜேந்திர பாலாஜி விளாசல்!

தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 114-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: “அண்ணாவின் பெயரை குப்பையில் போட்டுவிட்டு அண்ணாவின் புகழை குப்பையில் போட்டுவிட்டு தன்னுடைய குடும்பம் வாழ்வதற்காக கலைஞர் திமுகவை பயன்படுத்தினார். கலைஞரும் தற்போது உள்ள … Read more

ஓமலூர்: மதுகடைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் இரு ரவுடி கும்பல்கள் இடையே கைகலப்பு.!

ஓமலூர் அருகே காமலாபுரம் அரசு மதுகடை பாரில் இரு தரப்பு ரவுடிகள் ஒருவரை ஒருவர் தாக்குதல் நடத்தி, வாகனங்களை உடைத்து மக்களை அச்சுறுத்திய நிலையில் போலீசார் ரவுடிகளை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் ஒரு கடையில் பார் அனுமதி பெற்றுள்ளதாக கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பார் நடத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் நடத்தப்பட்ட பார் உரிமம் … Read more

உலகப் புகழ் பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்!

உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளரும் புக்கர் பரிசு பெற்றவருமான ஹிலாரி மாண்டல் காலமானார். இவருக்கு வயது 70 புகழ்பெற்ற எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் இரண்டு முறை புக்கர் பரிசை வென்றவர். அவர் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘வோல்ப் ஹால்’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘பிரிங் அப் தி பாடி’ நாவலுக்காக புக்கர் பரிசை வென்றவர். அவர் எழுதிய ‘தி டிரையாலஜி மிரர்’ மற்றும் ‘தி லைட் ஆகியவை 2020இல் வெளியிடப்பட்ட உடனேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; விபத்தில் உயிரிழந்த கனகராஜ் 16 செல்போனில் தகவல் பரிமாற்றம்: அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல்

உதகை: கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பி.முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய 4 பேர் மட்டும் ஆஜராகினர். அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி, ‘‘இப்போது வரை கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் 316 பேரிடம் … Read more

கோவையில் 7வது பெட்ரோல் குண்டு… திக் திக் நிமிடங்கள்- விடிய விடிய விடாத போலீஸ்!

கோவை மாநகர் கடந்த சில நாட்களாக பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது, பி.எஃப்.ஐ அமைப்பை குறிவைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு, இந்து முன்னணியை குறிவைத்து நடக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு. இப்படி பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டது கோவை. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என மொத்தம் 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது. இந்து முன்னணி மற்றும் பாஜகவினரின் … Read more

7வது திருமணம் செய்ய வந்த பெண்! 6வது கணவனால் மடக்கி பிடிப்பு!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும், மதுரை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ம்  தேதி திருமணம் நடந்தது.  திருமணத்தை மதுரையை சேர்ந்த பாலமுருகன் (45) என்ற புரோக்கர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அக்கா மற்றும் மாமா ஆகிய இருவர் மட்டுமே வந்துள்ளனர்,  அவர்களும் புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிக்கொண்டு சென்றனர்.  தனபால், சந்தியாவுடன் புது … Read more

விழுப்புரம்: பள்ளி மாணவி தற்கொலை – மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்

மரக்காணம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், இவரது 14 வயது மகள், கந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு மாணவி அவரது வீட்டில்; தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு … Read more

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான விதிகள் வெளியீடு!!

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் எந்தவொரு தனிநபர், எந்த சாதி, மதம் போன்றவற்றைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது. எக்காரணம் கொண்டும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு தொடர்பாக எதையும் பேசவோ அல்லது கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் … Read more