பிடிஆர் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

மதுரை பரவையில் R.J.தமிழ்மணி சாரிட்டபிள் ட்ரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: தமிழக முதல்வர் தற்போதைய நிலையை கவனமாக கையாள வேண்டும். தீபாவளி வர உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கையை தற்போதே தொடங்க வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். விழா காலங்களில் அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை … Read more

ஓசி பஸ் என்கிறார்கள்… இலவச பயணத்தை புறக்கணியுங்கள் – பிரேமலதா வேண்டுகோள்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியளர்களைச் சந்தித்த அவர், ”ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை, வசதியானவர்கள்தான் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க போகின்றனர் என அமைச்சர் கூறுகிறார். இப்படி கூறுவதற்கு எதற்காக ஒரு அமைச்சர்? பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு எளிதில் செல்ல முடியாத அளவிற்கு அரசுப் பேருந்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகள் கிடைக்காத … Read more

போத்துண்டி மலைப்பாதையில் குட்டியுடன் உலா வந்த காட்டுயானை

பாலக்காடு: நெல்லியாம்பதி, போத்துண்டி மலைப் பாதையில் குட்டியுடன் காட்டுயானை உலா வந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியாம் பதி – போத்துண்டி சாலை 14வது கொண்டை ஊசி வளைவில் குட்டி காட்டுயானை உலா வந்தது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போத்துண்டிவனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பட்டாசு வெடித்தும், சத்தம்போட்டும் யானைகளை விரட்டினர்.   சாலையில் நடமாடிய யானையை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படம் பிடித்தனர். அவர்களுக்கு வனத்துறையினர் உரிய … Read more

ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் – 2 நாளில் 2.50 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணம்

ஆயுத பூஜையையொட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 2.50 லட்சம்பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்ததாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயுத பூஜையையொட்டி செப்.30, அக். 1 ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, பயணிகளின் வருகைக்கு … Read more

அம்பேத்கர்… கலாம் எந்த சாதி?; பாடப்புத்தகத்தில் பகீர் கேள்வி!

சின்மயா மிஷன் என்கிற பெயரில் இந்து அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் ஏராளமான கல்வி நிலையங்களை நடத்தி வருகிறது. மேலும் பள்ளி பாடப்புத்தகங்களை தயாரித்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா என்கிற பள்ளி, சின்மயா மிஷன் தயாரித்துள்ள புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பு தயாரித்துள்ள 6ம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் மனிதர்கள் அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் பிராமணர்கள், சத்திரியர்கள், … Read more

ஓசி பயணம்… வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் போராட்டம் – எச்சரிக்கும் வேலுமணி

அமைச்சர் பொன்முடி விழா ஒன்றில் பேசுகையில், “ஓசி பஸ்லதானே போறீங்க” என பேசியது தமிழ்நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் என கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அந்த  மூதாட்டிக்கு பணம் கொடுத்து அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார் என பேச்சு எழுந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கும் … Read more

தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை உப்பார்பட்டி பிரிவு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூல் தொடங்கியது

தேனி: தேனியில் இருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உப்பார்பட்டி பிரிவு அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் நேற்று முதல் வாகன ஓட்டுனர்களிடம் இருந்து வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த 2010ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்தன. ஆரம்பத்தில் நான்கு வழிச்சாலை என கூறப்பட்டாலும், நான்கு வழிச்சாலையாக இல்லாமல் மையத்தடுப்பானுடன் கூடிய இருவழிச்சாலையே … Read more

புதுச்சேரி | மின்தடைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் பழிசுமத்துகிறார்; போராட்டக்குழு குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் சனிக்கிழமை மின்சாரம் தடைபட்டுள்ளது அதற்கு காரணம் மின்துறை ஊழியர்கள் என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் போராட்டக்குழு மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இதுபற்றி மின்துறை பொறியாளர் மற்றும் தொழிலாளர் தனியார்மய எதிர்ப்புப் போராட்டக்குழு பொதுச்செயலர் வேல்முருகன் இன்று கூறியதாவது: ”கடந்த இரண்டரை ஆண்டு காலமாக மின்துறை தனியார் மயத்துக்கு எதிராக போராட்டக் குழுவானது போராடிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரத்தை நாங்கள் வழங்கிக் கொண்டு எங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம் இது … Read more

பாஜக, அதிமுக‌ இரண்டும் ‌வேண்டாம்- கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

திண்டுக்கல்லுக்கு இன்று வருகை தந்த தேமுதிகவின் பொருளாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: “தமிழக முழுவதும் காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேமுதிகவை பொருத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்று வருகின்றோம். மது இல்லாத, போதை இல்லாத, கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் கஞ்சா விற்பனை மது விற்பனை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக கூடிய சூழ்நிலை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. … Read more

ஆர்.எஸ்.எஸ்-ஐ தனி மனிதனால் அழிக்க முடியாது – மத்திய இணையமைச்சர் சூளுரை

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள்வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுநாளும் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கும் மரியாதை செலுத்திவருகின்றனர்.  அந்தவகையில், சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேருவே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை … Read more