பொருள் வாங்காதவர்களுக்கு 'கௌரவம்': கூட்டுறவுத்துறை செயலர் தகவல்..!
“குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்கள் வாங்காத நபர்கள் ‘கௌரவ ரேஷன் கார்டு’ பெற்றுக் கொள்ளலாம்” என கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில், உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து, கல்லுக்குழி நியாய விலைக்கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர், டி.வி.எஸ். டோல்கேட் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். … Read more