பாஞ்சாங்குளம் சாதி பாகுபாடு | ஊருக்குள் நுழைய 5 பேருக்கு 6 மாதம் தடை: நெல்லை நீதிமன்றம் உத்தரவு

சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் சாதிய வன்கொடுமை புகாருக்கு உள்ளான 5 பேரை, 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து, திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஞ்சாங்குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் பெட்டிக்கடைக்கு கடந்த வாரம் குழந்தைகள் சிலர் மிட்டாய் வாங்க வந்தனர். ஆனால், ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்தக் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த கடைக்காரர் மகேஸ்வரன், அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் … Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ரத்து: நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த … Read more

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை

மதுரை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை என்ற தகவலும், அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கரும்பு கடையில் உள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு அவரை கைது … Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் 13 நாட்கள் செல்ல அனுமதி

மதுரை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு புரட்டாசி அமாவாசை, நவராத்திரி விழாவுக்காக பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை… PFI அமைப்பை சேர்ந்த சுமார் 100 பேர் கைது

மதுரை, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம், கேரளாவில் சுமார் 60 இடங்களில் NIA அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலவே எஸ்.டி.பி.ஐ கட்சி … Read more

ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் மரணம்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராவணன் மாரடைப்பால் காலமானார். இவர் சசிகலாவின் சித்தப்பா கருணாகரன் என்பவரின் மருமகன். அதிமுகவில் சசிகலா செல்வாக்கு மிக்கவராக இருந்த காலகட்டத்தில் கோவை மண்டல அதிமுகவின் அறிவிக்கப்படாத தளபதியாக இவர் பணியாற்றினார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டியவர் இவர். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை … Read more

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: மியான்மரில் சிக்கியுள்ள 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளர். இது தொடர்பாக முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மியான்மர் நாட்டில் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருப்பதாக மாநில அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தனியார் ஆட்கள் சேர்ப்பு முகமைகள் மூலம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக அவர்கள் தாய்லாந்து நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர், … Read more

முதலில் இந்துக்கள், இப்போது தாய்மார்கள்: லேட்டா கண்டுபிடிச்ச அண்ணாமலை

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, சூத்திரர்கள் என்பவர்கள் யார், மனுஸ்மிருதி அவர்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது என்பதை செப்டம்பர் 6ஆம் தேதி திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசினார். பாஜக மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் ஆ.ராசாவின் பேச்சை சர்ச்சையாக்கினர். இந்துக்களை ஆ.ராசா இழிவுபடுத்திவிட்டார் என்று சமூகவலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதிமுகவும் இந்த பிரச்சாரத்தில் இணைந்து கொண்டது. ஆ.ராசாவுக்கு எதிராக கடையடைப்பு போராட்டமும் பாஜகவால் நடத்தப்பட்டது. ராசாவுக்கு எதிராக காவல்துறையில் புகாரும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்துக்களை இழிவுபடுத்திவிட்டார் என்று திரித்து … Read more

கூடலூர் அருகே மின் கம்பியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே பிதர்காடு பஞ்சோராவில் தோட்டத்தில் உள்ள மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது. பாக்கு மரத்தை தள்ளிய போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆண் யானை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.