வருமான வரி, வருங்கால வைப்பு நிதி தரவுகளை வழங்க வேண்டும் – நிர்மலா சீதாராமனிடம் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கு வருமானவரித் துறை மற்றும் வருங்கால வைப்பு நிதி தரவுகளை வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியைக் கோருவதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் புதுடெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் நிதிதுறை சார்ந்த பல்வேறு … Read more

பெரியகுளத்தில் சிறுத்தை கொலை? ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்தப்படும்; வனத்துறை ரேஞ்சர் தகவல்

பெரியகுளம்:  தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. அந்த இடம் ஓபிஎஸ்சின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டமாகும். இந்த தோட்டத்தில் ஆட்டுமந்தை அமைத்துள்ள பூதிபுரத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(35) என்பவரிடம் வனத்துறையினர் விசாரித்தனர். அவர் அமைத்திருந்த ஆட்டுக்கிடையில் 2 ஆடுகள், சிறுத்தைக்கு பலியானது. இதனால் சோலார் மின்வேலியில் சுருக்கு கம்பி அமைத்து சிறுத்தை கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து அலெக்ஸ் … Read more

முதல் மனைவி தலைமையில் 2-வது திருமணம் செய்து கொண்ட டிக்டாக் பிரபலத்தின் தற்போதைய நிலையை பாருங்க..!!

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண். டிக் டாக்கில் பிரபலமான இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர். இருவருக்கும் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். … Read more

சர்வதேச முதியோர் தினம் | முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு விருது – ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ சார்பில் வழங்கப்பட்டது

சென்னை: சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ சார்பில் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு விருது வழங்கப்பட்டது. முதியோரை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறவில்லை. இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பு சார்பில் சர்வதேச முதியோர் தினம் நேற்று … Read more

ரயிலில் பயணம் செய்தபோது அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு

சிதம்பரம்: தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்றுமுன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறியுள்ளார். ஏசி முன்பதிவு பெட்டியில் பயணித்த அவருக்கு நள்ளிரவு 2 மணியளவில் சிதம்பரம் அருகே வந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல் வியர்ப்பதாக உதவியாளரிடம் கூறியுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்ததையடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. அப்போது, சிதம்பரம் ரயில்வே போலீசார், அமைச்சர் மெய்யநாதனை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் … Read more

6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2-ம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது மழைபெய்யக் கூடும். 3, 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். 2-ம் தேதி … Read more

8 வார்டுகளில் கூட்டணியுடன் வெற்றி கடம்பூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

கயத்தாறு: கடம்பூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகாவில் உள்ள கடம்பூர் பேரூராட்சியின் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மற்ற 9 வார்டுகளுக்கு தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. வார்டுகளில் திமுக சார்பில் 7 வேட்பாளர்களும், காங்கிரஸ், மதிமுக சார்பில் தலா ஒரு வேட்பாளரும், பாஜ சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேச்சைகள் 13 பேர் … Read more

50 ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டதை அரசியலாக்காதீர்கள்; மகனின் திருமணத்துக்கு ஆன செலவு ரூ.3 கோடிதான்: பழனிசாமிக்கு அமைச்சர் பி.மூர்த்தி பதில்

மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, அமைச்சர் பி.மூர்த்தி, தனது மகன் திருமணத்தை ரூ.30கோடி செலவில் மிக ஆடம்பரமாக நடத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி கூறியது: எனது மகன் திருமணத்தில் அனைத்து மக்களையும் சமமாக பாவித்து உணவருந்த ஏற்பாடு செய்தேன். ஒரு இலை உணவுக்கு ரூ.300 செலவாகியிருக்கும். எனது தொகுதியைச் சேர்ந்த ஏழை மக்கள், திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சித் தொண்டர்களும் எனது அழைப்பை ஏற்று … Read more

மகளிருக்கான இலவச பஸ்சில் ஏற்றி மூதாட்டியை கட்டண டிக்கெட் எடுக்க வைத்து அதிமுகவினர் அவதூறு வீடியோ; நடவடிக்கை எடுக்கப்படுமா? எஸ்பி விளக்கம்

கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிமுகம் செய்தார். அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை சகித்துக்கொள்ள முடியாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோவை மதுக்கரை பிரித்விராஜ் (40). மதிவாணன் (33) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து பாலத்துறைக்கு புறப்பட்ட அரசு டவுன் பஸ்சில் துளசியம்மாள் (70) என்பவரை ஏற்றினர். பிரித்விராஜ், மதிவாணன் … Read more

கம்யூனிஸ்ட் மாநாடு: ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் செல்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு, திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ளதாகூர் தியேட்டரில் நேற்று தொடங்கியது. அக்.3 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று ‘கூட்டாட்சி மற்றும் மத்திய – மாநில உறவு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். அவருடன் கேரள முதல்வர் பினராயிவிஜயனும் பங்கேற்கிறார். மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்றுகாலை 11.30 மணிக்கு முதல்வர் … Read more