கோவையில் ஊருக்குள் புகுந்த காட்டு மாடு சிக்கியது: தடாகம் வனத்தில் விடுவிப்பு

கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்துள்ள கீரணத்தம் சகாரா சிட்டி எனப்படும் இடத்தில் கடந்த 17ம் தேதி ஒரு காட்டு மாடு நடமாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கோவை வனச்சரக அலுவலர் அருண்குமார் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் காட்டுமாடு தேடும் பணியில் ஈடுபட்டனர். காட்டுமாடு சரவணம்பட்டியை அடுத்துள்ள வினாயகாபுரம் பகுதியில் கண்டறியப்பட்டது. பின்னர், காளப்பட்டி அருகில் சரவணம்பட்டியில் இருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்றது. இதனால், மாட்டை … Read more

தொடரும் பொருளாதார நெருக்கடி – தமிழகத்தில் அதிகரிக்கும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை!

இலங்கையிலிருந்து அகதிகளாக ஆறு சிறார்கள் உட்பட 12 பேர் மணல் தீடையில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் கடலோர காவல் குழுமம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே இலங்கையில் இருந்து வந்த 150 பேர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று மேலும் ஆறு சிறார்கள் … Read more

பள்ளித் தலைவர், விளையாட்டுத் தலைவராக மாணவர்கள் – சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் புதிய முயற்சி

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பள்ளித் தலைவர் மற்றும் பல்வேறு குழுவின் தலைவர் நியமனம் செய்யும் புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்கப் பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 291 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க சென்னை மாநகராட்சி கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறன்றன. இந்நிலையில், சென்னை பள்ளிகளுக்கு என்று தனியாக இலட்சினை, பேட்ஜ் … Read more

ஆ.ராசா, பிடிஆர் பேச்சுகள் திமுகவின் காதுகளில் ஏன் விழுவதில்லை?

சென்னை பெரியார் திடலில், ‘60 ஆண்டுகால விடுதலை ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் விடுதலை சந்தா வழங்கும் விழா’ என்கிற தலைப்பில் திராவிடர் கழகத்தால் கூட்டம் ஒன்று கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக, யாரெல்லாம் இந்துக்கள் என அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையானது. அதாவது, மனுஸ்மிருதியில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் எவ்வாறு வகைபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்கிப் … Read more

குறவன்-குறத்தி ஆட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் போதுமான விபரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த முத்துமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான குறவர் பழங்குடி சமூகத்தினர் உள்ளனர். தமிழகத்தில் திருவிழா காலங்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன் – குறத்தி ஆட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் முன்பு புராணக்கதைகள், நீதிக்கதைகள், சமூக விழிப்புணர்வை … Read more

அடுத்த மாதம் கூடும் தமிழக சட்டப்பேரவை? ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கலாகுமா?

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. ஆறு மாதத்துக்கு ஒரு முறை தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்பது பேரவை விதி என்பதால், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை ஐந்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட … Read more

நீர் திறப்புக்கு முன்பாக பெரியார் கால்வாயை சீரமைக்கவேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

சின்னமனூர்: நீர் திறப்புக்கு முன்பாக தந்தைப் பெரியார் கால்வாயை சீரமைக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு மூலம் பாசனவசதி பெறாத பகுதிகளுக்கு கால்வாய் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்டு ஒரு போக விவசாயம் நடைபெற்று வருகிறது. பிடிஆர் மற்றும் தந்தைப் பெரியார் கால்வாய்கள் மூலம் உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட சின்னமனூர், வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 830 ஏக்கர் நிலங்கள், தேனி வட்டத்திற்கு உட்பட்ட சீலையம்பட்டி, … Read more

டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணி வழக்கு மாற்றம்!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும், வேலுமணிக்கு … Read more

பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஊட்டி மலை ரயில் பாதையில் யானைகள் முகாம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

குன்னூர்: பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஊட்டி மலை ரயில் பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு  வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப காடுகளில் நாவல் பழம், பலா உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. அவற்றை சாப்பிட கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வருகின்றன. இந்நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் அதிகளவில் பலாப்பழ மரங்கள் உள்ளன. இவற்றை உண்பதற்காக யானைகள் கூட்டமாக கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு போன்ற … Read more

தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த இளைஞர் உடல்: கொலையா? தற்கொலையா? – ரயில்வே போலீஸ் விசாரணை

ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா? அல்லது ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என்பது போன்ற பல கோணங்களில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல், தலை, கை, கால்கள் ஆங்காங்கே சிதைந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர், தகவலின் … Read more