என்ன பேச விடுங்கடா; திண்டுக்கல் சீனிவாசனை பாடாய் படுத்திய தொண்டர்கள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், பத்திரிக்கையாளர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நான் பேசுவது ஒரு வார்த்தை தவறாக இருந்தால் என்னை கேள்வி கேட்கலாம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். அதன்படி முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர் ஒருவர் உற்சாகமிகுதியில் ஓ பன்னீர்செல்வத்தை திட்டி … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வியில் நடந்த முறைகேடு தொடர்பாக 8 பேர் மீது வழக்கு

மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வியில் நடந்த முறைகேடு தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டு வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கி பல்கலைக்கழகத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.   

வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்த கொழிசாலை மீன்கள் – வேதனையின் மீனவர்கள்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் டன் கணக்கில் குவிந்த கொழிசாளை மீன்கள் வரத்து அதிகரிப்பாலும் வியாபாரிகள் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் மீன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுமார் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலும் ஏற்றுமதி ரக … Read more

அரசியலே வேண்டாம்: சுப்புலட்சுமி ஜெகதீசன்

ஈரோடு: திமுகவிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். திமுக மேலிடம் மீதான அதிருப்தி காரணமாக தனது துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் விருப்பத்தின் அடிப்படையில் விலகுவதாக அவர் தனது விலகல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சுப்புலட்சுமி ஜெகதீசனின் விலகல் அறிக்கையில், “2009ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக் காலம் நிறைவு பெற்ற பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் … Read more

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்… என்ன காரணம்?

திமுகவின் 15வது உட்கட்சி பொதுத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. பலரும் ஆர்வத்துடன் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திமுகவிற்கு ஷாக் கொடுக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் 1989ஆம் ஆண்டு முதல் திமுகவில் பணியாற்றி வருகிறார். ஈரோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். முன்னாள் முதல்வர் கருணாநிதி … Read more

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுங்கள் – திமுக அரசுக்கு மீனவர்கள் அறிவுரை!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும் பல லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கி நஷ்டத்தை ஏற்படுத்துவதும்  தொடரையாதையாகி வருகிறது.  இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று காலை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து. மீன்பிடிக்கச் சென்ற நிலையில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த … Read more

கனியாமூர் தனியார் பள்ளியில் தீயில் எரிந்து சேதமடைந்த மாணவர்களின் சான்றிதழ்: புதிய சான்றிதழ் வழங்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த 17.7.2022 அன்று நடந்த போராட்டம், கலவரமாக வெடித்தது. அப்போது பள்ளி மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டதோடு, மாணவர்கள் சான்றிதழ்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இதில் பள்ளி கட்டிடம் பலத்த சேதமடைந்தது. மேலும் போலீஸ் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி மூடப்பட்டு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது. … Read more

அரசு மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசுடன் மேகாலயா புரிந்துணர்வு ஒப்பந்தம்

மருத்துவ நிபுணர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கு மேகாலயாவுக்கு ஆதரவளிக்க தமிழ்நாடு அரசுடன் மேகாலயா அரசு, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரச் சேவையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்காக இரு மாநிலங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இரு மாநிலங்களுக்கு இடையே செய்யப்படும் முதல் மருத்துவக் கூட்டாண்மை ஆகும். இதையும் படியுங்கள்: Chennai Power Shutdown, 20th September: தாம்பரம், வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை சென்னை ஓமந்தூரார் அரசு … Read more

கோவில்பட்டி | மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காமல் இருக்க குடும்பத்துக்கு தலா ரூ.5,000 விநியோகம்? – வீடியோ பரவியதால் அதிர்ச்சி

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் கடந்த 9-ம் தேதி முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணல் குவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அரசன்குளம், புளியங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களைத் திரட்டி குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நாம் தமிழர் … Read more

அமைச்சருக்கு தரணும்! பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் டாஸ்மார்க் ஊழியர்கள்!

சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது, இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.  இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கி பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.  ஒவ்வொரு பாட்டிலுக்கும் … Read more