இனி வெள்ளத்தில் மிதக்காது.. சென்னை மேயர் கியாரண்டி..!

“கடந்த ஆண்டு சென்னையின் எந்தெந்த இடங்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டதோ, அந்த இடங்களை தேர்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என, மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சிவராஜின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் … Read more

சென்னையில் சொத்துவரி செலுத்த இன்று கடைசி நாள்: இதுவரை ரூ.650 கோடி வசூல் 

சென்னை: சென்னையில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை செலுத்த இன்று கடைசி நாள் ஆகும். தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையில் புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி புதிய சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தபால் மூலம் … Read more

கார்த்திகை தீப விழாவுக்கு தயாராகிறது திருவண்ணாமலை!: பூர்வாங்க பணிகள் தொடக்கம்.. விமர்சியாக நடைபெற்ற பந்தகால் முகூர்த்தம் விழா..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. அக்னி தலமான திருவண்ணாமலை தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக … Read more

எய்ம்ஸ் குறித்து தவறான தகவல் – ஜெபி.நட்டா மீது காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கடந்த சில தினங்கள் முன்பு மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்தது எனக் கூறியதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் 95 சதவீதம் நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று … Read more

வரிசை கட்டி வரும் பண்டிகை.. 2 மடங்கு கட்டணம் உயர்த்தியது ரயில்வே..!

ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரிசையாக வரவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி … Read more

போர்க்கால அடிப்படையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். வடகிழக்கு பருவமழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது, வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது, பருவமழை துவங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை ஒரு மாநில அரசின் முக்கியமான … Read more

வேலூர்: கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட இருந்த ரூ.10 கோடி பறிமுதல் – 4 பேர் கைது

பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலீசார்;, ஹவாலா பணமா என விசாரணை மேற்கொண்டள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய காவலர்கள் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த காவலர்கள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் முன்னுக்குப் பின் … Read more