காஞ்சிபுரம்: எரிவாயு சிலிண்டர் கிடங்கில் பயங்கர தீ விபத்து – 2 பேர் பலி.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் உள்ள கிடங்கில், சமையல் சிலிண்டர்களை இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, ஓர் சிலிண்டர் தவறி விழுந்து வெடித்துச் சிதறியதால் பற்றிய தீ கிடங்கு முழுவதும் பரவியது. கிடங்கின் அருகே நடந்து சென்றவர்களும் நெருப்பினால் பாதிக்கப்பட்டனர். தகவலின்பேரில் … Read more

மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்பு – மதுரை அதிமுக பொதுக் கூட்டத்தில் இபிஎஸ்

மதுரை: ‘‘தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்’’ என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுகவின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே மூன்று மாவட்டங்கள் சார்பிலும் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு வந்த அதிமுக இடைக்கால … Read more

அதிமுக, அமமுக இருந்து வந்தவர்களுக்கு திமுகவில் உச்சபட்ச பதவி!

திமுகவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி அண்மையில் நடைபெற்ற 15 ஆவது தேர்தலில் மாநகர, மாவட்ட அளவில் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் அதிகாரபூர்வ பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் முக்கியாக, திமுகவில் உசசபட்ச பதவியாக கருதப்படும் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மொத்தம் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் ஏழு மாவட்டச் செயலாளர்கள் அந்தப் பதவியில் இருந்து … Read more

சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை: கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவு

கடலூர்: சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை: கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனையாக செப்.16 முதல் சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

"திமுக ஆட்சியை நினைத்து திமுகவினரும் மக்களும் வருந்துகின்றனர்" – மதுரையில் இபிஎஸ் பேச்சு!

சற்று கவனக்குறைவாக இருந்ததால் அதிமுக அமைக்க வேண்டிய ஆட்சியை திமுக கைப்பற்றிவிட்டது என்றும், பொம்மை முதல்வராக தமிழக முதலவார் உள்ளார் என்றும் பேசியுள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் … Read more

திருநெல்வேலியில் மர்ம காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி!!

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். சுகாதார துறையினரும் கிராமம், கிராமமாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். பாளையங்கோட்டை மூலைக்கரைப்பட்டி பரமசிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் டெய்லர் ஆதிநாராயணன் (40). இவரது மூத்த மகள் தங்கவேணி (12). இவர் அதே பகுதியில் உள்ள … Read more

அரசு வழங்கிய 500 இலவச ஆடுகளில் 250 இறப்பு: சாப்டூர் விவசாயிகள் புகார்

மதுரை: சாப்டூர் பகுதியில் அரசின் இலவச ஆடுகள் 500 வழங்கியதில் 250 இறந்துவிட்டன என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு போதிய நிதி ஒதுக்கியும் தரமில்லாத நோயுள்ள ஆடுகளை வழங்கியும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் … Read more

விரைவில் சட்ட சபை தேர்தல்; திரியை கொளுத்தும் எடப்பாடி!

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் ஆளுயர மாலை அணிவித்து மேள தளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த ராஜ் சத்யன் உள்ளிட்டோரும் சிறப்பான வரவேற்பு வழங்கினர். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற … Read more

எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதி வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை

சேலம்: எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. நகை கொள்ளை குறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

’குழந்தையை காண வரும் முன்னாள் கணவரை டீ கொடுத்து உபசரிக்க வேண்டும்’ என்ற உத்தரவு ரத்து!!

குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேனீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை கணவர்–மனைவியாக கருதாமல், விருந்தினர்களாக கருதி, குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும் … Read more