பரவும் இன்ஃப்ளுயன்சா; பள்ளிகளுக்கு விடுமுறைவிட அவசியமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் அதிகரித்துவரும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் காரணமாக இப்போதைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் இல்லை என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 37-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடக்கிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த ஜூலை … Read more

முதுமலை புலிகள் காப்பக சாலையில் பிளாஸ்டிக் உட்கொள்ளும் காட்டு யானை; வீடியோ வைரல்

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் மசினகுடி – தெப்பகாடு சாலையோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டு யானை பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலமாகவும், சிலர் தடையை மீறியும் இவற்றை பயன்படுத்துகின்றனர். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை வனத்தை ஒட்டியுள்ள பகுதிகள், பொது இடங்களில் வீசி செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் … Read more

சென்னையில் நோயைப் பரப்பும் சாக்கடைப் பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் 

சென்னை: சென்னையில் நோயைப் பரப்பும் சாக்கடைப் பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் வாரக்கணக்கில் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. பல இடங்களில் கழிவுநீர் குழாய்கள் உடைந்து அந்த பள்ளங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாக்கடையாக மாறிக் கிடக்கின்றன. சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அருகில் உருவாகியுள்ள சாக்கடைகள் கொசுக்களும், … Read more

ஃபுளூ காய்ச்சல்… பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு அமைச்சர் அட்வைஸ்!

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 இன்று சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 36 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 35 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். இதுவரை (18-09-2022) 12-14 வயதுடைய 19,86,409 (93.65%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 15,66,176 (73.84%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. … Read more

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுங்கள்: ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்தில்‌ குழந்தைகளிடையே பரவி வரும்‌ ப்ளு காய்ச்சலை கட்டுக்குள்‌ கொண்டு வரத் தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு திமுக அரசை ஒபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்,”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‌” என்னும்‌ பழமொழிக்கேற்ப ஒவ்வொரு மனிதனும்‌ நோயின்றி வாழ்வதையே விரும்புகிறான்‌. இவ்வாறு வாழ்வதற்கு உடலோம்பல்‌ மிகவும்‌ அவசியம்‌ என்றாலும்‌, சீதோஷ்ண நிலைமைக்கேற்ப சில நோய்கள்‌ பரவுகின்றபோது, திருவள்ளுவரின்‌ வாக்கிறகிணங்க, நோய்‌ இன்னதென்று கண்டறிந்து அதற்குண்டான காரணத்தை தெரிந்து, அதன்பின்‌ அந்நோயை படிப்படியாக நீக்கும்‌ … Read more

மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும்…! – மத்திய அரசுக்கு முத்தரசன் கோரிக்கை..!

மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என முத்தரசன் மத்திய அரசுக்கு கோரிக்கை. மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐடி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இது போன்ற போலி நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கடந்த 5ம் தேதி அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், தாய்லாந்தில் வேலை உள்ளதாக கூறியதை நம்பி சென்ற சுமார் 60 … Read more

பெரியார் பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டு விதிமீறல் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

சென்னை: பெரியார் பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டு விதிமீறல் பற்றி விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குனர், நூலகர் ஆகிய பணிகளுக்கான ஆள் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூகநீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவது சமூகநீதி குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் … Read more

மன உளைச்சலில் குளித்தலை எம்.எல்.ஏ ..! -காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார்..!

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற உறுப்பினரும், நகர செயலாளருமான இரா. மாணிக்கம் கடந்த 16ஆம் தேதி காலைக்கதிர்நாளிதழில்வெளிவந்த தவறானசெய்தியால் மன உளைச்சலில்இருப்பதாகவும், பொய்யான செய்தியைவெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குளித்தலை காவல் நிலைய ஆய்வாளரிடம்புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் அவர் கூறியிருப்பதாவது “கரூர் மாவட்டம் குளித்தலை நகர திமுக செயலாளராக கடந்த 30 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன். மேலும் பல்வேறு பொறுப்புகளில்இருந்து வருகிறேன். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் தற்போதும் இரண்டாவது முறையாகசட்டமன்ற … Read more

அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் 2024-ம் ஆண்டுக்குள் தயாராகும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

மதுரை: 2024-ம் ஆண்டுக்குள் ஜல்லிக்கட்டு வளாக அரங்கப் பணிகளை முடிப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இரவு பகல் பார்க்காமல் பணிகள் நடைபெறும் என்று பொதுப்பணிகள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக பிரசித்திப் பெற்றதாக திகழ்வதால் இந்தப் போட்டிகளை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க தமிழக அரசு அறிவித்து இருந்தது. இன்று இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுவதற்கான … Read more

'பெரியார் வெறும் சிலை அல்ல; அவர் ஒரு தத்துவம்'-மாணவர்கள் மத்தியில் நடிகர் சத்யராஜ் பேச்சு!

”என்னம்மா கண்ணு செளக்கியமா என கேட்டால், ஆமாம்மா கண்ணு செளக்கியம் தான் என, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் கூற முடிகிறதென்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார்” எனப் பேசினார் நடிகர் சத்யராஜ். திருச்சியில் உள்ள தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியார் 144 வது பிறந்த நாள் விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. … Read more