ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான 6876 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் ரூபின் சார்லஸ் என்பவருக்கு புஞ்சை குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றி கட்டடம் கட்டி மோட்டார் தொழில் கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து ரூபின் சார்லஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்து சமய … Read more

ஓசி பயணம் செய்ய மாட்டேன்.. கண்டக்டருடன் மல்லுகட்டிய மூதாட்டி..!

“திமுக ஆட்சியில் பெண்கள் அனைவரும் ஓசியில் பயணம் செய்கின்றனர்” என அமைச்சர் பொன்முடி கூறியிருந்த நிலையில், அரசு பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர் ‘ஓசி பயணம் செய்ய மாட்டேன்’ எனக்கூறி கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும், குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும் போது, “திமுக ஆட்சியில் … Read more

பதவியை இழந்த திமுக கவுன்சிலர் மீண்டும் பணியாற்ற சென்னை மாநகராட்சி மன்றம் அனுமதி – காரணம் என்ன?

சென்னை: 3 மாதங்கள் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத காரணத்தால் பதவியை இழந்த 118 வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மல்லிகா தொடர்ந்து மாமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 118-வது மாமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த மல்லிகா. இவர் தொடர்ந்து 3 மன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி அவர் தகுதி நீக்கம் ஆகிவிட்டார். இது தொடர்பாக மல்லிகா, சென்னை மாநகராட்சி இ-மெயில் … Read more

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அவருக்கு 62 வயது நிறைவடைந்ததையொட்டி செப்டம்பர் 12ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, செப்டம்பர் 13ஆம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி துரைசாமி செயல்பட்டு வருகிறார். ஆனால் செப்டம்பர் 21ஆம் தேதி அவரும் பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து, மூத்த நீதிபதி … Read more

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 40 பயணிகள் படுகாயம்

உடுமலை: உடுமலை அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மாலை 4.30 மணிக்கு குடிமங்கலம் ஒன்றியம் அம்மாபட்டி வழியாக ஆமந்தகடவு நோக்கி அரசுபஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் உடுமலை, பெதப்பம்பட்டியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயணித்தனர். பஸ் வடுகபாளையம்- சனுப்பட்டி இடையே பாலம் ஒன்றில் சென்று வளைவான … Read more

“தற்போது வரை சென்னையில் 95% மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது”- மேயர் பிரியா தகவல்

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள் வரும் 10 தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், 95 சதவீத பணிகள் தற்போது வரை முடிந்துள்ளது என்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்திருக்கிறார். முன்னாள் மேயர் சிவராஜின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மிண்டு தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் … Read more

குணமடைந்து வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார். கடந்த 25-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா இல்லை என தெரியவந்தது. பின்னர், … Read more

புதுச்சேரியில் நடிகர் தனுஷ் பேனருக்கு பீர், பால் அபிஷேகம்: கோபமடைந்த பொதுமக்கள்

புதுச்சேரி: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் தியேட்டர் முன்பு தனுஷ் பேனருக்கு பீர், பால் அபிஷேகம் செய்தும், கையில் சூடம் ஏற்றியதை பார்த்தும் பொதுமக்கள் முகம் சுளித்தனர். நடிகர்கள் இவ்விஷயத்தில் மவுனம் கலைப்பார்களா என்ற கேள்விகளோடு கடந்து சென்றனர். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நகரின் முக்கிய சாலையில், கடலில் உடைந்த பாலத்திலுள்ள கம்பியில் … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் ரூ.174.48 கோடி மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.9.2022) நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் 174.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு வடகிழக்கு … Read more

ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி உற்பத்தி தீவிரம்: நடப்பாண்டில் மூட்டைக்கு ரூ.100 அதிகரிப்பு

சேலம்: ஆயுதபூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொரி உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்தாண்டைவிட நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.100 அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை நாளான்று வீடுகள், தொழிற்சாலைகள், மெக்கானிக் கடைகள், பட்டறைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆயுதங்களை சுத்தம் செய்து, அவற்றுக்கு திருநீரால் பட்டையிட்டு, சந்தனம், குங்குமம் இட்டு பொரி, தேங்காய், பழம், எலுமிச்சை பழம் மற்றும் பலவகையான பழங்களை வைத்து சரஸ்வதிக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த … Read more