போலியான வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை – வனத்துறை எச்சரிக்கை

காட்டாற்றில் குளித்த யானைகளை இளைஞர்கள் அச்சுறுத்தியதாக வைரலாகும் வீடியோ சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ளது இல்லை என இணை கள இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் ஏற்பட்டு செந்நிறத்தில் ஓடுவதாகவும், இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மாயாற்றில் யானைகள் குளித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற இளைஞர்கள் யானைகளுக்கு இடையூறு செய்ததால் அவை அச்சத்தில் கரையேறுவதாகவும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் … Read more

பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் சுரங்கப் பாதைக்கான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: பொதுப்பணித் துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர 2-வது சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையை பொதுப்பணித் துறை செயலர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்பு 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் … Read more

வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. இந்தத் தேர்வில் ஹரியாணாவைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். நீட் தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், … Read more

TNPSC தேர்வில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் முக்கிய மாற்றம்! நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் ஹரிசான்டல் ஒதுக்கீட்டு முறை, வெர்டிக்கல் ஒதுக்கீட்டு முறை எனப்படும் இருவேறு முறைகளையும் பின்பற்றி பலத்தரப்பட்ட அரசு பணிகளுக்கான ஒதுக்கீடு பொதுவாக கணக்கிடப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது.  அதன்படி தற்போதைய நடைமுறையில் தமிழக அரசு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும்போது, ஹரிசான்டல் ஒதுக்கீடு முறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடும்,  வெர்டிக்கல் ஒதுக்கீடு முறையில் சமூகப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடும் கணக்கிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. … Read more

பின்தங்கிய தொகுதி என எதுவும் இருக்கக்கூடாது!: லட்சக்கணக்கான மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுதான் திமுக அரசின் சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

நெல்லை: லட்சக்கணக்கான மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுதான் திமுக அரசின் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் ரூ.74.24 கோடி மதிப்பீட்டில் 29 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.156.28 கோடியில் 727 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 30,658 பயனாளிகளுக்கு ரூ.117.78 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.15 கோடியில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: பொருநை நாகரீகத்தின் பெருமையை கூறும் வகையில் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அரசுப் போக்குவரத்து துறையில், வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் புகார்தாரர்களின் சமரசத்தை ஏற்றுக்கொண்டு செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்தார் செந்தில்பாலாஜி. அப்போது, அவர் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த … Read more

குமரி மாவட்டத்தில் மீண்டும் கோலாகலமாக களைகட்டிய ஓணம் பண்டிகை!

கேரளாவில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக 10 நாட்கள் கொண்டாடபட்டு வருகிறது. இதை அடுத்து கேரள எல்லையை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில், மலையாள மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடபடுவது வழக்கம். எனினும், கொரோனா நோய் தொற்று ஊரடங்கால், கடந்த இரண்டு ஆண்டுகள் ஓணம் பண்டிகை கேரளாவை போல் குமரியிலும் களையிழந்து காணபட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்ட துவங்கி, இன்று திருவோணம் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி … Read more

குடகனாற்றில் ரசாயன கழிவுகள் கலந்ததால் திடீரென்று பச்சை நிறமாக மாறிய தண்ணீர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேடசந்தூர்: வேடச்சந்தூர் அருகே குடகனாற்றில் ரசாயன கழிவுகள் கலந்ததால் தண்ணீர் திடீரென்று பச்சை நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக குடகனாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி நீர் தேக்கத்தில் சேமிக்கப்படுகிறது. இந்த நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி தடுப்பணைக்கு வரும் தண்ணீர் கடந்த 2 நாட்களாக கரும்பச்சை நிறத்தில் இருந்தது மேலும் அதிகமான நுரை பொங்கி, … Read more

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலம்

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற பெரிய தேர்பவனி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படும், புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டுதிருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 10 நாட்கள் நடைபெற்று வந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா பெரிய தேர் பவனி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேர் பவனியையொட்டி, தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் பேராலயத்தில் சிறப்பு கூட்டுபாடல் … Read more

‘இந்திய ஒற்றுமை பயணம்’ 2-வது நாள் | ராகுலை வாழ்த்தி வரவேற்ற கன்னியாகுமரி மக்கள்

கன்னியாகுமரி: ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி நடைபயணத்தை மேற்கொண்டார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து நேற்று தொடங்கிய இந்த ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், … Read more